MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜோதிகா தான் கரெக்டா இருக்கும்.. சூர்யாவால் ஒதுக்கப்பட்ட அசின்.. செய்யாறு பாலு சொன்ன தகவல்..

ஜோதிகா தான் கரெக்டா இருக்கும்.. சூர்யாவால் ஒதுக்கப்பட்ட அசின்.. செய்யாறு பாலு சொன்ன தகவல்..

நடிகர் சூர்யாவால் நடிகை அசின் ஒதுக்கப்பட்ட சம்பவம் குறித்து செய்யாறு பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ramya s
Published : Nov 15 2023, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

2004-ம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் அந்த படத்தில் மலையாளப் பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பார். அந்த படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அசினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மஜா, சிவகாசி, போக்கிரி, ஆழ்வார், வேல், தசாவதாரம் என பல படங்களில் நடித்தார். குறிப்பாக சூர்யா நடிப்பில், ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி படத்தில் அசினின் கல்பனா கதாப்பாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது. அசினின் நடிப்பு திறமைக்கு மிகச்சிறந்த உதாரணமாக கஜினி படம் அமைந்தது. 

35
Asin

Asin

தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கவும் அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தியிலும் ஆமீர்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஹிந்தி திரையுலகில் உச்சத்தில் இருந்தார். இதனிடையே 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அசினுக்கு அரின் என்ற பெண் குழந்தை உள்ளது.

45

இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு அசின் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் “ சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க முதலில் அசினிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் என்றும், அதில் அசினுக்கு ஐஷு என்ற கேரக்டர் என்றும் கூறினார்கள். ஆனால் அசினோ தனக்கு ஜோதிகா நடித்த குந்தவை கேரக்டர் தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

55

ஆனால் படக்குழுவினர், அந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்று சூர்யா திட்டவட்டமாக இருபப்தாக கூறிவிட்டனர். ஆனால் அசினோ குந்தவை கேரக்டர் என்றால் நடிக்கிறேன், மற்ற கேரக்டர் என்றால் வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். அந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்று சூர்யா உறுதியாக இருந்ததால் அதில் அசின் நடிக்கவில்லை. அதன்பிறகே அதில் பூமிகா நடித்தார்” என்று தெரிவித்தார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Theatre Releases : பத்தா முதல் சிக்மா வரை... அக்டோபர் முதல் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் 5 படங்கள்
Recommended image2
Anjali Marriage: கல்யாணம் எப்போ... யாரும் எதிர்பார்க்காத பதிலை சொல்லி அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி..!
Recommended image3
Thriller Movies : குலை நடுங்க வைக்கும் 5 திரில்லர் படங்கள்! கிளைமாக்ஸ் வரை விலகாத மர்மம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved