- Home
- Cinema
- Panaiyur : மினி கோடம்பாக்கமாக மாறிய பனையூர்... ஒரே ஏரியாவில் இத்தனை சினிமா பிரபலங்கள் வசிக்கிறார்களா?
Panaiyur : மினி கோடம்பாக்கமாக மாறிய பனையூர்... ஒரே ஏரியாவில் இத்தனை சினிமா பிரபலங்கள் வசிக்கிறார்களா?
Kollywood Celebrity Homes in Panaiyur : சென்னை பனையூரில் ஏராளமான தமிழ் சினிமா பிரபலங்களுக்கு வீடு இருக்கிறது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Tamil Cinema Celebrities Home in Panaiyur
சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள பனையூர் பகுதி, தற்போது திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் வசிப்பிடமாக மாறி இருக்கிறது. அமைதியான சூழல், பசுமையான சாலைகள், கடற்கரையை ஒட்டி இயற்கை எழில் கொஞ்சும் பகுதி என பல அம்சங்களைக் கொண்ட இந்த ஏரியா, நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகி வாழ விரும்புபவர்களின் தேர்வாக இருக்கிறது. இதனால், பனையூர் பகுதி தற்போது ‘மினி கோடம்பாக்கம்’ ஆக மாறி உள்ளது. நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இப்பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.
நடிகை குஷ்புவின் பங்களா
தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகப் பயணித்து வரும் அவர், இயக்குநர் சுந்தர்.சி.யை திருமணம் செய்துகொண்ட பிறகு தமிழ் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமானார். பனையூரில் குஷ்புவுக்குச் சொந்தமான பிரம்மாண்டமான பங்களா இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டை அவர் கெஸ்ட் ஹவுஸ் ஆக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பனையூரின் 10வது அவென்யூவில் தான் நடிகை குஷ்புவின் வீடு அமைந்துள்ளது. இதுதவிர அவருக்கு சென்னை போட் கிளப் சாலையிலும் ஒரு வீடு இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் வீடு
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகனாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். திருச்சியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தனது நகைச்சுவை உணர்வு மற்றும் மேடைப் பேச்சுத் திறன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாகக் கிடைத்த புகழை சினிமா வாய்ப்பாக மாற்றிக்கொண்ட சிவகார்த்திகேயன், இன்று தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார். பனையூர் பகுதியில் அவருக்குச் சொந்தமான பிரம்மாண்ட வீடு உள்ளது.
சினேகா – பிரசன்னா இல்லம்
தமிழ் ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அழைக்கப்படும் சினேகா, நடிகர் பிரசன்னாவை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சினேகா, கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். பனையூர் பகுதியில் சினேகா – பிரசன்னா தம்பதியினரின் வீடு அமைந்துள்ளது. பனையூர் ஐந்தாவது அவென்யூவில் அமைந்துள்ள அவர்களின் வீட்டின் சுற்றுப்புறத்தில் பசுமையான தோட்டங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. கடற்கரைக்கு மிக நெருக்கமாக இவர்கள் வீடு அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத்தின் பிரம்மாண்ட இல்லம்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், தனது இசையால் இளம் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரது பனையூர் இல்லம், கட்டிட அமைப்பு மற்றும் சுற்றுப்புறப் பசுமை காரணமாகக் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. பனையூரில் இருக்கும் வீடுகளிலேயே அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட வீடு அனிருத் வீடு தான். மேலும், இந்த வீட்டின் மாடியில் இசையமைப்புப் பணிகளுக்காக பிரத்யேக ஸ்டூடியோ வசதி அமைக்கப்பட்டுள்ளது. வீட்டை சுற்றி செடிகளுடன் மிக பசுமையாக காட்சியளிக்கிறது.
பனையூரில் அரசியல் பிரபலங்களின் தொடர்பு
திரையுலகப் பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்த சில முக்கிய நபர்களும் பனையூர் பகுதியில் வசிக்கிறார்கள். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் இப்பகுதியில் அமைந்துள்ளது. அதேபோல், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கும் பனையூரில் வீடு உள்ளது. இதில் அண்ணாமலை வாடகை வீட்டில் தான் வசிக்கிறார். இதனால் பனையூர் திரைப்பிரபலங்களுக்கு மட்டுமின்றி, அரசியல்வாதிகளுக்கும் ஃபேவரைட் ஸ்பாட்டாக இருக்கிறது.
மீசைய முறுக்கு 2: சாய் அபயங்கரை சீண்டினாரா ஹிப்ஹாப் ஆதி? கிளம்பிய 'நெப்போ கிட்' சர்ச்சை!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

