- Home
- Cinema
- மீசைய முறுக்கு 2: சாய் அபயங்கரை சீண்டினாரா ஹிப்ஹாப் ஆதி? கிளம்பிய 'நெப்போ கிட்' சர்ச்சை!
மீசைய முறுக்கு 2: சாய் அபயங்கரை சீண்டினாரா ஹிப்ஹாப் ஆதி? கிளம்பிய 'நெப்போ கிட்' சர்ச்சை!
'மீசைய முறுக்கு 2' படத்தில் இடம்பெற்றுள்ள "நெப்போ கிட்ஸ்" தொடர்பான வசனம் சாய் அபயங்கரை மறைமுகமாக தாக்குவதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளனர்.

சாய் அபயங்கரை சீண்டினாரா ஹிப்ஹாப் ஆதி?
இண்டி மியூசிக் எனப்படும் சுதேசி பாடல்களைப் பாடக்கூட தற்போது நெப்போ கிட்ஸ் செம டிரைனிங் எடுத்துக்கொண்டு பக்காவாக இறங்கி விட்டனர் என 'மீசைய முறுக்கு 2' படத்தில் இடம்பெற்ற வசனம்தான் தற்போது இந்த பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளது. இசையமைப்பாளர் & நடிகரான ஹிப்ஹாப் தமிழா ஆதி, 'கானா vs கர்நாடக சங்கீதம்' என்கிற கதையை ஆரம்பித்து கடைசியில் நெப்போ கிட் பஞ்சாயத்து வரை 'மீசைய முறுக்கு 2' படத்தில் பேசியுள்ளார்.
வாரிசு நடிகராக வில்லன் ரோலில் ஒருவரைப் போட்டு, ஆபாச வசனத்திற்கு இணையாக நெப்போ என ஹிப்ஹாப் ஆதி கத்த, அதற்கு அந்த நடிகர் வந்து சண்டையே பிடித்துவிடுவார். ஆனால், இந்தப் படத்தை தயாரித்ததே சுந்தர். சி மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் தான் என்று பதிலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு எதிராக சாய் அபயங்கர் ரசிகர்கள் போட்டு பொளந்து வருகின்றனர்.
சாய் அபயங்கர் vs ஆதி
தமிழ் சினிமாவில் இன்றைக்கு டாப் இசையமைப்பாளர்களாக அனிருத் மற்றும் சாய் அபயங்கர் உள்ளனர். அனிருத்தையே ஓவர்டேக் செய்துவிட்டு சாய் அபயங்கர் அல்லு அர்ஜுன் படம் வரை பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ள 'மீசைய முறுக்கு 2' படத்தில் வில்லன் ரோலில் வைக்கப்பட்ட கதாபாத்திரம் மறைமுகமாக சாய் அபயங்கரை அட்டாக் செய்கிறது என நெட்டிசன்கள் பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளனர்.
இண்டி மியூசிக்கில் நடிகைகளுடன் ஆட்டம்
பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரினியின் மகன்தான் சாய் அபயங்கர். ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ், அனிருத் உள்ளிட்டோரிடம் கீபோர்ட் கலைஞராக பணியாற்றிய சாய் அபயங்கர், இண்டி மியூசிக் எனப்படும் சுதேசி பாடல்களான கட்சி சேர, ஆசை கூட, சித்திர புத்திரி, விழி வீக்குற, பவழ மல்லி, ரதிமா என டாப் ஹீரோக்களை போல இளம் நடிகைகளுடன் ஆட்டம் போட்டு இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஏகப்பட்ட படங்களையும் கைவசம் வைத்துக்கொண்டு டாப் இசையமைப்பாளராகவும் குறுகிய காலத்தில் ஆகிவிட்டார். இதற்கு காரணமே அவர் ஒரு நெப்போ கிட் என்கிற பஞ்சாயத்துதான்; அதனால்தான் தற்போது 'மீசைய முறுக்கு 2' படத்தில் மறைமுகமாக ஹிப்ஹாப் ஆதி அவரை அட்டாக் செய்துள்ளார் என்கின்றனர்.
நெப்போடிச சர்ச்சை
பாலிவுட் முதல் கோலிவுட் வரை நெப்போடிச பிரச்னைகளும் சர்ச்சைகளும் எல்லா இடங்களிலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' படத்தின் ஹீரோ சந்தீப் கிஷனை விட, மீடியா வெளிச்சம் அதிகப்படியாக ஜேசன் சஞ்சய்க்கு இருக்கத்தான் செய்கிறது. இதே சினிமாவில் சுயம்புவாக பல திறமையான கலைஞர்களும் தங்களது திறமைகளை காட்டி சூப்பர் ஸ்டார்களாகவும் மாறியுள்ள வரலாற்றையும் யாரும் மறக்கவே முடியாது. அந்த விஷயத்தைதான் கிளைமேக்ஸில் ஹிப்ஹாப் தமிழா ஆதி காட்டியிருப்பார் என்பதால், இந்த தேவையற்ற விவாதங்கள் எல்லாம் வீண்வேலைதான் என்றும், முன்னேறுகிற வழியைப் பாருங்கள் என்றும் சண்டை போடுபவர்களுக்கு எதிராக அட்வைஸ்களும் சோஷியல் மீடியாவில் குவிகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

