'சந்தரமுகி 2 ' படத்தின் கதை இதுவா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள 'சந்திரமுகி 2 ' திரைப்படம் குறித்த தகவல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட், மற்றும் படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் பி.வாசு.
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சூப்பர் ஸ்டாரின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு இரண்டும் சேர்ந்து படத்தை கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஓடவைத்தது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சந்திரமுகி கதை இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று வேட்டையன் ராஜா, மற்றொரு கதாபாத்திரம் ஜோதிகா ஏற்று நடித்த சந்திரமுகி.
இந்நிலையில் "ரா ரா" பாடலில் மட்டுமே காட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை இரண்டாம் பாகம் முழுவதும் காட்டப்போகிறார்களாம்.
அதாவது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளது உருத்தியானது. ஜோதிகா மீண்டும் 'சந்திரமுகி 2 ' படத்தில் சந்திரமுகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அதனை மறுத்தார்.
இதுவரை இந்த படத்தின் அடுத்த கட்ட தகவல்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த படம் வேட்டையன் கேரக்டரின் முழு வடிவமாக இருக்கும் என்றும் சந்திரமுகி குடியிருந்த அரண்மனையில் ஒரு புதிய குடும்பம் குடியிருக்க வருவதாகவும் அவர்களுக்கும் வேட்டையன் கேரக்டருக்கு ஏற்படும் மோதல் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் மே மாதம் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.