MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சந்திரபாபுவின் பேரன் நடித்து இயக்கியுள்ள ‘தெற்கத்திவீரன்’! திரைப்படமான தூத்துக்குடி உண்மை சம்பவம்!

சந்திரபாபுவின் பேரன் நடித்து இயக்கியுள்ள ‘தெற்கத்திவீரன்’! திரைப்படமான தூத்துக்குடி உண்மை சம்பவம்!

சந்திரபாபுவின் பேரன் சரத், இயக்கி, தயாரித்து, நடித்துள்ள தெற்கத்திவீரன் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ...  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 28 2022, 11:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சந்திரபாபுவின் பேரன் சரத், இயக்கி, தயாரித்து, நடித்துள்ள தெற்கத்திவீரன் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமாகிறார் சாரத்.

படப்பிடிப்புக்கு முன்பே.. தளபதி 67 படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டலைட் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்

38

சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக  அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள்’ பரணி, ’மாரி’ வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர்.

48

படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். என்.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு  செய்ய வி.ஜே.சாபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்கத்தை குருராஜ் கவனிக்க, பாரதி மற்றும் சாண்டி நடனம் அமைத்துள்ளனர். சண்டை பயிற்சி : சூப்பர் சுப்புராயன் – கனல்கண்ணன். 

55 வயதில் இப்படியா? கீழே பேண்ட் போட்டு... புடவை கட்டி வித்தியாசமான ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் நடிகை சீதா!

58

படம் பற்றி படத்தின் நாயகனும் இயக்குனருமான சாரத்திடம் கேட்டபோது, “தூத்துக்குடியில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே ‘தெற்கத்தி வீரன்’ கதை. எனது சொந்த ஊரும் தூத்துக்குடிதான். அங்கு நடந்த உண்மை சம்பவத்தையே நான் படமாக்கியுள்ளேன். 5 வில்லன்கள் நான்கு நண்பர்களுக்கிடையே எழும் பகையும் அதனால் நடக்கும் மோதல்கள் அதற்குள் பின்னப்பட்ட ஒரு காதல் என திரைக்கதை, விறுவிறுப்பாகவும் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். படத்தில் 8 சண்டை, 5 பாடல்கள் இடம்பெறுகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா சார் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓபனிங் சாங் பாடியுள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தில் படமான இந்த பாடல் காட்சியில் சாண்டி மாஸ்டர் அழகாக நடனம் அமைத்துக்கொடுத்தார். அதிரடி சண்டை காட்சிகள் ஆக்‌ஷன் ப்ரியர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார்.

68

மேலும் இதுதான் எனக்கு முதல் படம். யாரிடமும் நான் உதவி இயக்குனராக இருந்ததில்லை. எனது மானசீக குருவே சினிமாதான். தவிர இன்றும் தமிழ்சினிமாவால் கொண்டாடப்படும் சந்திரபாபுவின் பேரன் நான். அவரது ரத்தம் எனக்குள்ளும் இருப்பதால் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருக்கலாம். ‘தெற்கத்தி வீரன்’ ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஆதிவாசி... மற்றும் ஏவாளாக மாறி காஜல் அகர்வால் எடுத்து கொண்ட போட்டோஸ் ஷூட்..! த்ரோ பேக் போட்டோஸ்..!

78

நாயகனின் நண்பராக வரும் அசோக் படம் பற்றி பேசுகையில், “நாயகனாக நடித்துவரும் எனக்கு இப்படியொரு கேரக்டர் சரிபட்டு வருமா என்று முதலில் தயங்கினேன். ஆனால் சாரத் என்னிடம் கதை சொன்ன விதமும் கதையும் பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தேன். டி.ஆர்.போல எல்லா திறமைகளும் கொண்டவர் சாரத். இந்த படம் எனக்கு முக்கியமான படமாகவும் இருக்கும்.” என்றார்.

88

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் கேட்டபோது, “ஒரு படத்தில் பல பொறுப்புகளை ஏற்று வேலை செய்வது சவாலானது. சாரத் சினிமாவுக்கு புதிது என்றாலும் அனுபவம் பெற்ற இயக்குனர் போல  இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். எனது இசையில் அப்பா பாடிய ”கடலம்மா..” பாடல் சூப்பரா வந்திருக்கு. இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கவேண்டும் என்று இயக்குனர் என்னிடம் கேட்டார். நான் மறுக்கவே ”கடலம்மா” பாடலில் நடிக்கவைத்துவிட்டார்.”என்றார். டிசம்பர் 2ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலரும், ”கடலம்மா கடலம்மா..” பாடலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் கல்யாண சேலையை காப்பி அடித்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரேயா..! செம்ம ஹாட்போட்டோஸ்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved