உன்னை பாக்குறது இதுதான் கடைசியா?.... சித்துவின் உடலை பார்த்து கதறி அழும் பிரபலங்கள்... கண்ணீர் போட்டோஸ்...!
First Published Dec 9, 2020, 7:27 PM IST
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் பக்கத்துக்கு வீட்டு பெண் போல் தோன்றி... மங்களகரமாக புடவையிலும், வெகுளி சிரிப்பையும் உதிர்த்து நடித்து வந்த வி.ஜே.சித்ரா இன்று உயிருடன் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம். இது வெறும் கனவாக இருக்க கூடாத என ரசிகர்கள் பலர், தங்களுடைய சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.

சீரியலில் பார்த்து ரசித்த மக்களுக்கும் இப்படி என்றால், அவருடன் பழகிய நண்பர்களுக்கும், சக நகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உள்ள வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

எப்போதும் மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் கலகலப்பாக பேசும், இவர் திடீர் தற்கொலை குறித்து அறிந்து அவரது நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் சிலரும், சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள, கீழ்ப்பாக்கம் மருத்துவமணிக்கே விரைந்தனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?