ஜம்முனு பட்டு வேஷ்டி சட்டையில் குடும்பத்துடன் 31-வது திருமணநாளை கொண்டாடிய கேப்டன்! குவியும் வாழ்த்து!
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது 31 ஆவது திருமணநாளை மனைவி, மகன்கள் என குடும்பத்துடன் மாஸாக கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்த்து தேமுதிக தொண்டர்கள் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் 90 களில் முன்னணி நடிகராக இருந்த, கேப்டன் விஜயகாந்த், 1990ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் பிரேமலதாவை கரம்பிடித்தார்.
இருவரும் தங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளை ஒவ்வொரு வருடமும் தங்களது குடும்பத்தினர், மற்றும் கட்சி தொண்டர்களுடன் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
அதே போல் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களும் காலை முதலே இவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
இந்நிலையில் தற்போது இவர்கள் தங்களது மகன்கள், மற்றும் உறவினர்களுடன் 31 ஆவது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
பட்டு வேஷ்டி சட்டையில் சும்மா ஜம்முனு இருக்கிறார் விஜயகாந்த். பிரேமலதாவும்... கணவர் போட்டுள்ள சட்டைக்கு மேட்சிங் நிற சேலையில், மாலையும் கழுத்துமாக நிற்கிறார்கள்.
மேலும் இவர்களது திருமண நாளை முன்னிட்டு, தேமுதிக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.