ரெடியா மாமே... அதகளமாக தயாராகும் அஜித்தின் கார் ரேஸ் ஆவணப்படம் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வரும் நிலையில், அது தொடர்பான ஆவணப்படம் ஒன்றும் தயாராகிறதாம். அதன் ரிலீஸ் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

Ajithkumar Car Race Documentary
நடிகர் அஜித் குமார் சினிமாவைவிட தற்போது கார் ரேஸில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்துக்கு பின்னர் அவர் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார். அஜித்தின் ஏகே 63 படத்தின் அப்டேடுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அப்டே ஒன்று வெளியாகி இருக்கிறது.
அஜித்தின் ஆவணப்படம்
அது என்னவென்றால், அஜித்தின் ஆவணப்படம் பற்றிய அப்டேட் தான். நடிகர் அஜித்குமார் அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றார். அப்போது அஜித்துடன் இயக்குனர்கள் ஏ.எல்.விஜய்யும், சிறுத்தை சிவாவும் உடன் சென்றிருந்தனர். அதில் ஏ.எல்.விஜய் தான் இந்த ஆவணப்படத்தை இயக்கி உள்ளாராம். கார் ரேஸுக்கு பின்னணியில் உள்ள சவால்கள் குறித்து இந்த ஆவணப்படத்தில் காட்டி இருக்கிறார்களாம். இதற்கான கிளிம்ப்ஸ் வீடியோவை நேற்று வெளியிட்டு இருந்தனர்.
இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்
நடிகர் அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான ஆவணப்படத்திற்கு இசையமைக்க உள்ளதை ஜிவி பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். மேலும் நேற்று வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில் அஜித் மலேசிய கார் பந்தயத்தின் முதல் சுற்றில் பாதியிலேயே கார் ரிப்பேர் ஆனதால் என்ன மனநிலையில் இருந்தார். அவரது டீம் எப்படி ரியாக்ட் செய்தார்கள் ஆகிய காட்சிகள் இடம்பெற்று இருந்தன. பின்னர் அடுத்த சுற்றில் சிங்கம் போல் கம்பேக் கொடுத்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
ஆவணப்படம் எப்போ ரிலீஸ்
ஆவணப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம் அஜித். இந்தியாவில் கார் ரேஸை பிரபலமாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் அஜித். அதன் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படத்தை எடுத்து தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் அஜித். இந்த ஆவணப்படத்தை வருகிற 2026-ம் ஆண்டு மே 1-ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்களாம். இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
Joining hands with AK sir again .. 🔥🔥🔥 mass a class a trks and osts Onway … thanks to my director alvijay and @SureshChandraa sir pic.twitter.com/nwewyXCdlR
— G.V.Prakash Kumar (@gvprakash) December 29, 2025
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

