MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • த.வெ.க கட்சி பாடலை கேட்டு கண் கலங்கி அழுத புஸ்ஸி ஆனந்த்! தேற்றிய தளபதி - போட்டோஸ்!

த.வெ.க கட்சி பாடலை கேட்டு கண் கலங்கி அழுத புஸ்ஸி ஆனந்த்! தேற்றிய தளபதி - போட்டோஸ்!

தளபதி விஜய் இன்று தன்னுடைய கட்சியின் பாடலை வெளியிட்ட பின்னர்... அந்த பாடல் ஓடி கொண்டிருக்கும் போதே, புஸ்ஸி ஆனந்த் கண் கலங்கி அழுத புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 22 2024, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK Party

TVK Party

தளபதி விஜய் கடந்த இரண்டு வருடங்களாகவே நிறைய அரசியல் கருத்துக்களை தன்னுடைய ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளில் பேசி வந்த நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பெயரை தேர்தல் அலுவலகத்திலும் பதிவு செய்தார்.

24
Vijay political Entry

Vijay political Entry

பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்பதை தெளிவுபடுத்திய விஜய், 2026 ஆம் ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை 324 தொகுதிகளிலும் சந்திக்க உள்ளதாக அறிவித்தார்.  இதைத்தொடர்ந்து தற்போது தன்னுடைய கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ள தளபதி இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலை வெளியிட்டார்.

 

34
Bussy Annand Cry

Bussy Annand Cry

 சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்த தமிழக வெற்றிக் கழக கொடியின் நடுவே, இரண்டு யானைகள் நிற்பது போலவும், நடுவே வாகை மலர் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் கொடி பாடலான 'தமிழன் கொடி பறக்குது' என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றிக் கழக கட்சியினர் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

44
TVK Song release

TVK Song release

தளபதி விஜய் தன்னுடைய கட்சி பாடலை கீழே இருந்து பார்த்து கொண்டிருந்த போது, அவர் அருகே அமர்ந்திருந்த கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீரென கண்கலங்கி அழுதார். பின்னர் விஜய் அவரை தேற்றினார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
தமிழக வெற்றி கழகம்
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image2
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved