பம்பர் முதல் போர் தொழில் வரை... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? - முழு லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் வருகிற ஜூலை 7-ந் தேதி தியேட்டரில் 9 படங்களும், ஓடிடியில் 4 திரைப்படங்களும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
பம்பர்
ஷிவானி ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் தான் பம்பர். இப்படத்தில் ஜீவி பட நாயகன் வெற்றி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் தங்கதுரை, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை செல்வக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். இப்படம் ஜூலை 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
மற்ற படங்கள்
பம்பர் தவிர எஞ்சியுள்ள 8 படங்களுமே சிறு பட்ஜெட் படங்கள் தான். அதன்படி நட்டி நட்ராஜ் நடித்துள்ள இன்பினிட்டி திரைப்படம், கிருஷ்ணாவின் ராயர் பரம்பரை, முனீஸ்காந்த்தின் காடப்புறா கலைக்குழு, விண் ஸ்டார் விஜய்யின் எப்போதும் ராஜா, ஹரி உதாரா இயக்கிய வில் வித்தை, ராம்குமார் இயக்கி நடித்துள்ள சித்தரிக்கப்பட்டவை, சிவம் இயக்கிய லில்லி மற்றும் இன்ஸிடியஸ் என்கிற ஹாலிவுட் படம் ஆகியவை இந்த வாரம் திரைக்கு வருகின்றன.
இதையும் படியுங்கள்... Salaar Teaser : இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா... சலார் டீசர் பார்த்து அப்செட் ஆன பிரபாஸ் ரசிகர்கள்
ஓடிடி ரிலீஸ் படங்கள்
போர்தொழில்
சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் சக்கைப்போடு போட்ட போர் தொழில் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூலை 7-ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஃபர்ஹானா
ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வரவேற்பை பெற்ற ஃபர்ஹானா திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் வருகிற ஜூலை 7-ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
டக்கர்
சித்தார்த் நடித்த டக்கர் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூலை 7-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்
ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் தான் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம். முத்தையா இயக்கிய இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படம் வருகிற ஜூலை 7-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் படமான 'மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்' வெளியாகும் திரையரங்குகளில் 'ஜவான்' ட்ரைலர் வெளியாகிறது!