7 படங்களில் 5300 கோடி வசூல் அள்ளிய ஒரே ஹீரோ; யார் இந்த பாக்ஸ் ஆபிஸ் பாகுபலி?
அதிக ஆயிரம் கோடி வசூல் படங்களை கொடுத்த ஹீரோ என்கிற சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கும் நடிகர் ஒருவர் 7 படங்களில் 5300 கோடி வசூலை வாரிக்குவித்திருக்கிறார்.

பாக்ஸ் ஆபிஸ் பாகுபலி
கோலிவுட்டில் வாரிசு நடிகர்கள் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும். ஆனால் டோலிவுட்டில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கும். அங்கு வாரிசு நடிகராக இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடியும். ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகமே ஒரு சில குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அப்படி சினிமாவில் ஆர்வம் இல்லாத ஒருவரைக்கூட ஹீரோவாக்கி அவரின் படங்கள் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளன. அந்த ஹீரோ யார்? என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபாஸின் சினிமா எண்ட்ரி
அந்த ஹீரோ நடித்த படங்கள் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, அவரின் மார்க்கெட் மட்டும் படத்துக்கு படம் எகிறிய வண்ணம் உள்ளாது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் அந்த ஹீரோ வெறும் 7 படங்களில் தான் நடித்திருக்கிறார். அதில் வெற்றியடைந்த படங்களை விட பிளாப் ஆன படங்கள் தான் அதிகம். இருந்தாலும் அவர் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.5300 கோடி வசூலித்திருக்கிறது. அந்த ஹீரோ வேறு யாருமல்ல... ரெபல் ஸ்டார் பிரபாஸ் தான். பிரபாஸின் சினிமா எண்ட்ரி மிகவும் விசித்திரமானது. அவரின் தந்தை சூரிய நாராயண ராஜு ஒரு திரைப்பட தயாரிப்பாளர். அவரின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு டோலிவுட்டில் ஒரு நட்சத்திர ஹீரோவாக வலம் வந்தார்.
இதையும் படியுங்கள்... பிரபாஸ் - சமந்தா ஜோடி இதுவரை ஏன் இணைந்து நடிக்கவில்லை?
பிரபாஸை பான் இந்தியா ஸ்டார் ஆக்கிய பாகுபலி
இருப்பினும், பிரபாஸ் ஒரு குறிப்பிட்ட வயது வரை படங்களில் நடிக்க விரும்பவில்லை. பிரபாஸ் ஒரு ஹீரோவாக வருவார் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை என கிருஷ்ணம் ராஜுவே கூறி இருக்கிறார். ஒரு நாள், பிரபாஸ் தன்னுடைய குடும்ப விழாவில் அற்புதமாக நடனமாடியதை தொடர்ந்து கிருஷ்ணம் ராஜுவிடம் ‘நான் நன்றாக நடனமாடுகிறேனா, நான் ஒரு ஹீரோவாக மாறுவேனா’ என்று நேரடியாகக் கேட்டிருக்கிறார். மேலும் தான் சினிமாவுல வரணும்னு ஆசைப்படுறேன். ஆனா இவ்வளவு நாளா உங்ககிட்ட சொல்லவே பயமா இருந்துச்சு என்று பிரபாஸ் கூறியிருக்கிறார். இதையடுத்து கிருஷ்ணம் ராஜு பிரபாஸை உடனடியாக சத்யானந்த் நடிப்புப் பள்ளியில் சேர்த்தார்.
பான் இந்தியா வசூல் மன்னன்
அங்கு நடிப்பு பயிற்சி பெற்ற பின்னர் ஈஸ்வர் படத்தின் மூலம் ஹீரோவானார் பிரபாஸ். அவர் நடித்த முதல் படம் பிளாப் ஆனது. பின்னர் வெற்றி தோல்விகளை சந்தித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாகுபலி 1 திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் 650 கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து 9 ஆண்டுகளில், பிரபாஸ் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 உட்பட மொத்தம் ஏழு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த ஏழு படங்களின் ஒட்டுமொத்த வசூல் மட்டும் ரூ.5300 கோடிகளைத் தாண்டியுள்ளது. இந்திய சினிமாவில் இந்த சாதனையைப் படைத்த ஒரே ஒரு ஹீரோ பிரபாஸ் தான்.
பிரபாஸின் பாக்ஸ் ஆபிஸ் சாதனை
அதில் அதிகபட்சமாக பாகுபலி 2 திரைப்படம் ரூ.2000 கோடி வசூலித்தது. இதையடுத்து சாஹோ 400 கோடி, ராதே ஷ்யாம் 200 கோடி, ஆதிபுருஷ் 350 கோடி வசூலித்தாலும், இதெல்லாம் தோல்வி படங்களாகவே அமைந்தன. பின்னர் சலார் 600 கோடி, கல்கி 1100 கோடி என வசூல் செய்து பிரபாஸுக்கு தரமான கம்பேக் படங்களாக அமைந்தன. தற்போது அவர் ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். இதுவும் ஒரு பான் இந்தியா படம் தான். இதுதவிர ஹனு ராகவபுடி இயக்கும் ஃபௌஜி மற்றும் சந்தீப் வாங்கா இயக்கும் ஸ்பிரிட் ஆகிய படங்களும் பிரபாஸ் கைவசம் உள்ளன.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக திகழும் நடிகர் பிரபாஸ்! இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?