MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Valimai : ஒரே மாதத்தில் இத்தனை கோடியா?... ‘வலிமை’யின் உண்மையான வசூலை வெளியிட்டு ஷாக் கொடுத்த போனி கபூர்

Valimai : ஒரே மாதத்தில் இத்தனை கோடியா?... ‘வலிமை’யின் உண்மையான வசூலை வெளியிட்டு ஷாக் கொடுத்த போனி கபூர்

Valimai : எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற வலிமை படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 24 2022, 05:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

2 வருட காத்திருப்புக்கு பின் வெளியான வலிமை

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை, இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதுதவிர ஏராளமான தடைகளை சந்தித்த இப்படம் ஒருவழியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியானது.

24

கலவையான விமர்சனங்கள்

கடந்த மாதம் 24-ந் தேதி தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இப்படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதிலும், வசூலை தொடர்ந்து வாரிக்குவித்து வந்தது. வெளியான 3 நாட்களிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது இப்படம்.

34

பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் என்ன?

இது ஒருபுறம் இருந்தாலும், வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் போலியானவை என ஒரு சில விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. அதுமட்டுமின்றி நகரங்களை தவிர்த்து பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் 20 சதவீதம் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்ததாகவும் கூறப்பட்டு வந்தன. இதனால் எது உண்மை என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.

44

உண்மையான வசூல் இதுதான்

இந்நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வலிமை படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்டு உள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். அதன்படி வலிமை படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அவர் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இப்படம் நாளை ஓடிடி-யில் ரிலீஸாக உள்ளது.

இதையும் படியுங்கள்... Aishwarya Rajinikanth : ஐஸ்வர்யாவின் புதுக் காதல் சக்சஸ் ஆனது... ரஜினி மகள் ஹாப்பியோ ஹாப்பி..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved