MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கொஞ்சம் காஸ்ட்லி என்ட்ரி தான்; முதல் தமிழ் படம் - கங்குவாவில் திஷா பாட்னி வாங்கிய சம்பளம் எவ்வளவு?

கொஞ்சம் காஸ்ட்லி என்ட்ரி தான்; முதல் தமிழ் படம் - கங்குவாவில் திஷா பாட்னி வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Disha Patani Salary : கங்குவா திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பாட்னி, தமிழ் திரை உலகில் நாயகியாக களமிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 13 2024, 07:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Disha Patani

Disha Patani

உத்திரபிரதேசத்தில் பிறந்து, பாலிவுட் திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமான நடிகை தான் திஷா பாட்னி. ஆனால் இவருடைய குடும்பத்தின் நிலையே வேறு, காரணம் திஷாவின் அப்பா ஒரு காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். அவருடைய தாய் ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல திஷா பாட்னியின் அக்காவும் இந்திய ராணுவப்படையில் லெப்டினன்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திஷா பாட்னி மட்டும் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற "பான்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா இன்டோர்" போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார். இப்போது 32 வயதாகும் திஷா பாட்னி, கடந்த 9 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வருகிறார்.

என்ன கங்குவா வராரு? மீண்டும் ஆட்டத்தை ஆரமிக்கும் கார்த்தி - நலனின் "வா வாத்தியார்" டீசர் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
MS Dhoni Movie

MS Dhoni Movie

பாலிவுட் உலகில் மிகப்பெரிய நாயகியாக வலம் வர வேண்டும் என்கின்ற கனவோடு களமிறங்கியர் திஷா பாட்னி, கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "லோஃபர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய கலை பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் ஷுஷாந்த் சிங் நடிப்பில் வந்த எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து அசத்தியிருந்தார். அதை தொடர்ந்து ஹிந்தி படங்களில் அவர் நடிக்க தொடங்கினார். கடந்த 2017 ஆம் ஆண்டு சீன மொழியில் வெளியான ஒரு படத்திலும் அவர் நடித்திருந்தார்.

34
Actress Disha Patani

Actress Disha Patani

பாலிவுட் உலகில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற "பாகி 2", "பாரத்", "பாகி 3", "ராதே" போன்ற பல திரைப்படங்கள் திஷா பாட்னிக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்த சூழலில் தான் இந்த 2024 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் நடித்து வெளியாகி உலக அளவில் மிகப் பெரிய ஹிட்டான "கல்கி" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். இந்த சூழலில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக கங்குவா திரைப்படத்தின் மூலம் அவர் நாயகியாக களமிறங்கினார். 

44
Disha in Kanguva Movie

Disha in Kanguva Movie

நாளை நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த சூழலில் திஷா பாட்னியும் தன்னுடைய திரைப்பட பிரமோஷன் பணிகளுக்காக இந்திய அளவில் பயணம் செய்து வருகிறார். மேலும் பொதுவாக இரண்டு முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் திஷா பாட்னி, கங்குவா திரைப்படத்தில் நடிக்க 3 முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தங்கலான் - கங்குவா; இந்த படங்களின் காம்போ உருவாக வாய்ப்பு இருக்கா? சூர்யா சொன்ன பதில் என்ன?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
சூர்யா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved