Govinda Net Worth: 61 வயதில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் கோவிந்தாவின் சொத்து மதிப்பு!
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான கோவிந்தா, தன்னுடைய மனைவி சுனிதாவை 61 வயதில், விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அவரை பற்றிய பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இவருடைய சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.

நிகர மதிப்பு மற்றும் ஸ்மார்ட் முதலீடுகள்:
கோவிந்தாவின் நிகர மதிப்பு ரூ. 150 கோடி (சுமார் $18 மில்லியன்) இருக்கும் என்று கூறப்படுகிறது. கோவிந்தா திரைப்படங்களில் மட்டும் இன்றி, ரியல் எஸ்டேட் முதலீடு மூலமாகவும் பல கோடி சம்பாதிக்கிறார். சில நிறுவனங்களிலும் தன்னுடைய பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் பல கோடி லாபம் பார்த்து வருகிறார்.
ஒரு நட்சத்திரத்திற்கான வீடு
கோவிந்தா தற்போது மும்பையின் ஜூஹு -வில் அமைந்துள்ள ஜெய் தர்ஷன் என்ற பிரமாண்டமான பங்களாவில் வசித்து வருகிறார். சுமார் ரூ. 16 கோடி மதிப்புள்ள இந்த ஆடம்பர பங்களாவில் அணைத்து வசதிகளும் உள்ளன. இதை தவிர ருயா பார்க், மட் ஐலேண்ட், கொல்கத்தா மற்றும் ராய்காட்டில் ஒரு பெரிய பண்ணை வீடு ஆகியவை இவருக்கு உள்ளது.
37 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; கோவிந்தா – சுனிதா அஹூஜா விவாகரத்து?
கார் சேகரிப்பு
மோட்டார் கார்களை விரும்பும் கோவிந்தா, தனது கேரேஜில் ஆடம்பர மற்றும் உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களை வாங்கி குவித்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஃபார்ச்சூனர் , ஃபோர்டு எண்டேவர், மெர்சிடிஸ் சி220டி உள்ளிட்ட இன்னும் சில கார்களும் இவர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் இருக்கும் நடனக் கலைஞர்
கோவிந்தா சினிமாவில் தனது எளிதான நடன அசைவுகளுக்காக மிகவும் பிரபலமானவர் என்றாலும், அவர் ஒரு பயிற்சி பெற்ற இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் என்பது சிலருக்குத் தெரியும். ரிதம் மற்றும் வெளிப்பாட்டின் மீதான அவரது பிடிப்பு அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியுள்ளது. அவரது நடன நிகழ்ச்சிகள் இன்றும் பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு இதுவே காரணம்.
கோவிந்தாவின் திரை வாழ்க்கை
கோவிந்தா 1990 களில் கூலி நம்பர் 1, ஹீரோ நம்பர் 1 மற்றும் பார்ட்னர் போன்ற படங்களின் வெற்றிகளால் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறினார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சமீப காலமாக குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்தாலும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.