37 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; கோவிந்தா – சுனிதா அஹூஜா விவாகரத்து?
Govinda and Sunita Ahuja Divorce Rumors : கோவிந்தா மற்றும் சுனிதா அஹுஜா 37 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்யவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இருவரும் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை.

37 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; கோவிந்தா – சுனிதா அஹூஜா விவாகரத்து?
Govinda and Sunita Ahuja Divorce Rumors : சினிமா உலகத்தில் எந்தளவிற்கு காதல் இருக்கிறதோ, அதே அளவிற்கு விவாகரத்தும் இருக்கிறது. இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கு சினிமா, பாலிவுட் சினிமா என்று எல்லா மொழிகளிலும் விவாகரத்து பிரிக்க முடியாத ஒன்றாக இப்போது மாறி வருகிறது. தனுஷ், ஜிவி பிரகாஷ், ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் ரவி மோகனும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
37 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; கோவிந்தா – சுனிதா அஹூஜா விவாகரத்து?
இதே போன்று தெலுங்கு சினிமாவில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் நாக சைதன்யா 2ஆவது திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இடையிலான விவாகரத்து செய்தி தான் அடிக்கடி தலைப்புச் செய்தியாக வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் இப்போது மற்றொரு பிரபலம் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
37 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; கோவிந்தா – சுனிதா அஹூஜா விவாகரத்து?
கோவிந்தா சுனிதா அஹுஜா விவாகரத்து: கோவிந்தா அருன் அஜூஜா என்ற இயற்பெயர் கொண்ட நடிகரும், அரசியல் பிரமுகருமான கோவிந்தா மற்றும் சுனிதா அஹூஜா இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. பாலிவுட் நடிகர் கோவிந்தா சமீபகாலமாக வெளிச்சத்தில் இருந்து வருகிறார். மீண்டும் ஒருமுறை அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் புயல் வீசுவதாகக் கூறப்படுகிறது.
37 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; கோவிந்தா – சுனிதா அஹூஜா விவாகரத்து?
அவரது மனைவி சுனிதா அஹுஜா பல நேர்காணல்களில் அவருடன் வசிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஜூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து, கோவிந்தாவும் சுனிதாவும் 37 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து செல்வதாகவும், அவர்களின் விவாகரத்து இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கோவிந்தாவும் சுனிதாவும் பிரிவதற்கு ஒரு மராத்தி நடிகையே காரணம் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், கோவிந்தா அல்லது சுனிதா தரப்பிலிருந்து இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
தனித்தனியாக வசிக்கும் கோவிந்தா-சுனிதா அஹூஜா
கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹூஜா சமீபத்தில் அளித்த சில நேர்காணல்களில், அவர் தனது கணவருடன் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்று கூறியிருந்தார். பல ஆண்டுகளாக இருவருக்கும் இடையே நிறைய ஏற்ற தாழ்வுகளும், மன அழுத்தமும் இருப்பதாக அவர் கூறினார். தனது திருமண வாழ்க்கையில் பல கடினமான காலங்களைச் சந்தித்ததாகவும், பல விஷயங்களைத் தாங்கிக் கொண்டதாகவும் சுனிதா வெளிப்படுத்தினார்.
37 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; கோவிந்தா – சுனிதா அஹூஜா விவாகரத்து?
கோவிந்தா நடிகை நீலத்தை காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் தனது தாயின் அழுத்தத்தின் காரணமாக அவர் சுனிதாவை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் கோவிந்தாவுக்கும் நீலத்துக்கும் இடையே நீண்ட காலம் தொடர்பு இருந்தது. 1990 ஆம் ஆண்டில் ஸ்டார்டஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில், நீலத்தை திருமணம் செய்து கொள்ள விரும்பியதால், சுனிதாவிலிருந்து ஒருமுறை பிரிய முடிவு செய்ததாக கோவிந்தா ஒப்புக்கொண்டார். அவர் கூறினார் - நான் சுனிதாவிடம் என்னை விட்டுவிடுமாறு சொன்னேன்.
37 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; கோவிந்தா – சுனிதா அஹூஜா விவாகரத்து?
அவளுடன் எனது நிச்சயதார்த்தத்தையும் நான் ரத்து செய்தேன். சுனிதா தொலைபேசி மூலம் என்னை மீண்டும் நிச்சயதார்த்தம் செய்ய சம்மதிக்க வைக்கவில்லை என்றால், நான் நீலத்தை திருமணம் செய்திருப்பேன். கோவிந்தா-சுனிதா மார்ச் 1987 இல் திருமணம் செய்து கொண்டனர். கோவிந்தா தனது திருமணத்தை நீண்ட காலமாக ரகசியமாக வைத்திருந்தார். இந்த தம்பதிக்கு டீனா மற்றும் யஷ்வர்தன் அஹுஜா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.