பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் வெளியிட்ட வீடியோ!.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் - எதற்கு தெரியுமா?
பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அக்ஷய் குமார் . இவர் இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்துள்ள செல்பி திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் அக்ஷய் குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்வதற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.
அக்ஷய் குமார் பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதான் நெட்டிசன்கள் அக்ஷய் குமாரை கலாய்த்து வருகிறார்கள்.
வெளிநாட்டில் நடைபெற்ற பாலிவுட் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை அக்ஷய் குமார் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு பாலிவுட் நிகழ்வு நடந்து வருகிறது, அதில் அக்ஷய் குமார், மௌனி ராய், நோரா ஃபதேஹி, திஷா பதானி மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
இந்த விளம்பரத்தில் அக்ஷய் குமார், பலர் இந்தியா மற்றும் உலக உருண்டையில் நடப்பது போல் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் அக்ஷய் குமார் இந்திய வரைபடத்தில் நடக்கிறார். இந்த வீடியோ வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இந்தியாவின் வரைபடத்தை அக்ஷய் குமார் மிதிக்கும் வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க..Viral Video: தாமிரபரணி ஆற்றில் அசால்ட்டாக ‘டைவ்’ அடித்த வயதான பாட்டி!.. வைரல் வீடியோ !!