Viral Video: தாமிரபரணி ஆற்றில் அசால்ட்டாக ‘டைவ்’ அடித்த வயதான பாட்டி!.. வைரல் வீடியோ !!
வயதான பாட்டி ஒருவர் ஆற்றில் மேலிருந்து குதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகத்தில் அன்றாடம் நாம் ஏதாவது ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாவது உண்டு. அவைகளில் சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.
நாம் இணையத்தில் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன. சில சமயம் சிந்திக்க வைக்கின்றது. சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றது.
தாமிரபரணி ஆற்றில் பாட்டி ஒருவர் தலைகீழாக குதித்து சாகசம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முதுமை எதற்கும் முட்டுக்கட்டை அல்ல, வயது எதற்கு தடையில்லை என்று கூறும் உற்சாகமான இந்த வீடியோவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க..AIADMK: தென்னரசுவிற்கு கிடைத்த பெரும்பான்மை!.. வலையில் சிக்கிய ஓபிஎஸ் - டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி !!
பொதுவாக கடல், ஆறு,குளம் என எந்த இடங்களிலும் சிலர் பார்த்தால் குளிக்காமல் இருக்கமாட்டார்கள். தற்போது வெளியான வீடியோ ஒன்றில் வயதான பெண்மணி ஒருவர் ஆற்றில் குளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாமிரபரணியில் தலைகீழாக குதித்து அசத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தாமிரபரணி ஆற்றின் மதகு மேல் இருந்து வயதான பாட்டி தலைகீழாக குதிக்கிற வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
பலரும் இந்த வீடியோ குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒருவர், அடேங்கப்பா பாட்டி இப்படி குதிக்குறாங்க, அப்பாடா, நம்மளால முடியாது போலயே, என்றும், மற்றொருவர் இவங்களுக்கு வயசே ஆகல என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க..மின் கட்டணம் கட்டவில்லையா? இன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் - மக்களே உஷார்.! முழு விபரம் உள்ளே