மின் கட்டணம் கட்டவில்லையா? இன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் - மக்களே உஷார்.! முழு விபரம் உள்ளே
வாடிக்கையாளர்கள் தங்களது கடந்த மாத மின் துறை கட்டணத்தை கட்ட தவறினால், இன்று இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி விவாசியகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மானிய மின்சாரம் பெறுவோர் ஆதாரே எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது.
இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!
இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதலில் டிசம்பர் 31ஆ ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15 ஆம் தேதி தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது கடந்த மாத மின் துறை கட்டணத்தை கட்ட தவறினால், இன்று இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என போலியான செய்தி மக்களின் மொபைல் எண்களுக்கு மெசேஜ் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் உலா வருகிறது. இந்த குறுந்தகவலை பயணாளர்கள் நம்ப வேண்டாம்.
இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் மின் கட்டணத்தை கட்ட விரும்பினால் மின் அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் மட்டுமே கட்டலாம் எனவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் துறை சார்பில் ஏதேனினும் ஊழியர் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்ஆபில் மூலமாகவோ அணுகினால் அதை நம்ப வேண்டாம் எனவும் மின் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ‘திடீர்’ குண்டு வெடிப்பு.. நடிகை சன்னி லியோனுக்கு என்ன ஆச்சு.? வெளியான உண்மை தகவல்!
இதையும் படிங்க..அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?