- Home
- Cinema
- மல்டி டேலன்டட் ஃபிராடு.. 12 கோடி தமிழர்கள ஏமாத்திருக்கீங்க - பார்த்திபனை விடாது கறுப்பாய் துரத்தும் ப்ளூ சட்டை
மல்டி டேலன்டட் ஃபிராடு.. 12 கோடி தமிழர்கள ஏமாத்திருக்கீங்க - பார்த்திபனை விடாது கறுப்பாய் துரத்தும் ப்ளூ சட்டை
Iravin Nizhal Issue : உலகிலேயே நான் லீனியர் முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இரவின் நிழல் தான் என பார்த்திபன் கூறிவது பொய் என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருந்தார்.

நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ள பார்த்திபன், உலகிலேயே நான் லீனியர் முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இதுதான் எனக் கூறி விளம்பரப்படுத்தி இருந்தார்.
இதனை சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருந்தார். குறிப்பாக இது முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என பார்த்திபன் கூறிவது பொய் என்றும், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான பிஷ் அண்ட் கேட் என்கிற ஈரானிய படம் தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்று ஆதாரங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சது இப்படித்தானா..! புது குண்டை தூக்கிப் போட்ட ப்ளூ சட்டை மாறன்
இதனால் கடுப்பான பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கெல்லாம் அசராத மாறன் பார்த்திபனை சாடி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவரை மல்டி டேலன்டட் ஃபிராடு என திட்டியும் பேசி உள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது : “ஆதாரங்களை வெளியிட்டும் அதற்கு விளக்கம் கொடுக்காமல் ஏதேதோ பேசி வருகிறார் பார்த்திபன். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் எனக்கூறி 12 கோடி தமிழர்களை ஏமாற்றி இருக்கிறீர்கள். இப்படி செய்தால் உங்களை இப்போ மல்டி டேலன்டட் இயக்குனர் என சொல்பவர்கள் அப்புறமா இவர் ஒரு மல்டி டேலன்டட் ஃபிராடுனு சொல்வார்கள். அவ்ளோதான்” என பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... என்னை அறியாமலே ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது - லெஜண்ட் சரவணன் பேச்சு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.