MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் தான் இம்புட்டு நாளா ஊர் சுற்றுகிறாரா அஜித்..! வெடித்தது புது சர்ச்சை

இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் தான் இம்புட்டு நாளா ஊர் சுற்றுகிறாரா அஜித்..! வெடித்தது புது சர்ச்சை

Ajith : லடாக் ட்ரிப்பிற்காக நடிகர் அஜித்குமார் ஓட்டிச் சென்ற பி.எம்.டபிள்யூ பைக்கிற்கு இன்சூரன்ஸ் இல்லை என புது சர்ச்சை கிளம்பி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
| Updated : Sep 05 2022, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கார் மற்றும் பைக்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் அஜித். ஆரம்பத்தில் கார் பந்தயங்களில் ஆர்வமாக பங்கெடுத்து வந்த அஜித், அதில் பலமுறை விபத்தில் சிக்கி, அதன்மூலம் தனது சினிமா கெரியரும் பாதிப்பை சந்தித்ததால், அதில் கலந்துகொள்வதை சுத்தமாக நிறுத்திக்கொண்டார். அதற்கு பதிலாக பைக்கின் மீது தனது கவனத்தை செலுத்த தொடங்கினார் அஜித்.

24

பைக் ரைடிங் செல்வது என்பது அஜித்துக்கு மிகவும் பிடித்த விஷயமாம். இந்தியாவாக இருந்தாலும் சரி, உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்றாலும் சரி, அங்கு ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஜாலியாக கிளம்பி விடுவார் அஜித். அந்த வகையில், சமீபத்தில் கூட ஐரோப்பா மற்றும் லண்டனுக்கு சுற்றுலா சென்றபோது பைக்கில் வலம் வந்தார் அஜித்.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?

34

தற்போது லடாக்கிற்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார் அஜித். அங்கு அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பைக் ரைடிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் அஜித்தும், மஞ்சு வாரியரும் முதன்முறையாக இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

44

இந்நிலையில், லடாக் ட்ரிப்பிற்காக நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற பைக்கிற்கு இன்சூரன்ஸ் இல்லை என புது சர்ச்சை கிளம்பி உள்ளது. அந்த பைக்கின் இன்சூரன்ஸ் கடந்த 2020-ம் ஆண்டே முடிந்துவிட்டதாகவும், அதன்பின் அதனை அஜித் புதுப்பிக்கவே இல்லை என ஒருவர் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் தான் அஜித் இந்தியா முழுவதும் வலம் வருகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அடக்கடவுளே..விக்ரம் கோப்ராவுக்கு இப்படி ஒரு நிலையா? கதறும் படக்குழு !

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved