பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?
Rajinikanth : சென்னையில் நாளை நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் பட விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறதாம்.
மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ரகுமான் ஆகியோரும், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். இதுதவிர சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மூன்றாவது முறையாக காதலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் புகைப்படம்!
இந்நிலையில், பொன்னியின் செல்வன் பட விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்பதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறதாம். அந்த விழாவில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளாராம் ரஜினி. பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தான் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள தலைவர் 170 படத்தையும் தயாரிக்க உள்ளதாம்.
இந்த படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தான் இயக்க உள்ளதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற டான் படத்தை இயக்கியவர் ஆவார். இதற்கான அறிவிப்பை நாளை விழா மேடையில் ரஜினி அறிவிப்பார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள்... ஜவானால் கார்த்தியின் ஜப்பான் படவாய்ப்பை இழந்த விஜய் சேதுபதி! அவருக்கு பதில் புஷ்பா வில்லனை களமிறக்கிய படக்குழு