MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 14 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கியது பிக்பாஸ் அல்டிமேட்.... 24 மணிநேர ஒளிபரப்பு ஏன்? - கமல் விளக்கம்

14 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கியது பிக்பாஸ் அல்டிமேட்.... 24 மணிநேர ஒளிபரப்பு ஏன்? - கமல் விளக்கம்

ஒருவேளை 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள், அதனை சிறப்பு தொகுப்பாக காணவும் ஒரு வழி உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 31 2022, 06:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார். 

26

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர். சமீப காலமாக ஓடிடி தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால் அதில் படங்களை நேரடியாக வெளியிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

36

இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இல்லாமல் 42 நாட்கள் மட்டுமே ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்றி, ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்து உள்ளனர்.

46

நேற்று பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் ஆகிய 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கியவர்கள் என்பதால், இந்நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது.

56

மேலும் இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் ஏன் என அறிமுக நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். அதன்படி “எடிட் பண்ணித் தானே போடுறாங்க.. மற்ற நேரங்கள்ல எல்லாம் என்ன நடந்ததுனு காட்டினா தானே உண்மை என்னனு தெரியும் என்று நிறைய பேர் கேட்டீர்கள். உங்கள் ஐடியாவைத் தான் தற்போது செயல்படுத்தியி உள்ளார்கள்” என கமல் கூறினார்.

66

ஒருவேளை 24 மணி நேரமும் இந்நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள், அதனை சிறப்பு தொகுப்பாக காணவும் ஒரு வழி உள்ளதாம். அதன்படி தினந்தோறும் இரவு 9 மணிக்கு சிறப்பு 1 மணி நேர தொகுப்பு ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
Recommended image2
சரவணன் வாழ்க்கையில் Ex Lover? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் இயக்குநர் வைத்த சீன் பை சீன் செக்; இனி எல்லாமே அதிரடிதான்!
Recommended image3
ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் வரிசையில் விஜய்... கோலிவுட்டை அதிர வைத்த விவாகரத்துகள் ஒரு பார்வை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved