MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தள்ளிப்போகிறது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி... துவங்கும் தேதி திடீரென மாற்றம் - எப்போ ஆரம்பிக்க போறாங்க தெரியுமா

தள்ளிப்போகிறது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி... துவங்கும் தேதி திடீரென மாற்றம் - எப்போ ஆரம்பிக்க போறாங்க தெரியுமா

BiggBoss Tamil 6 : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென அந்நிகழ்ச்சி துவங்கும் தேதி மாற்றப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 17 2022, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழில் மிகவும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். தமிழில் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

24

இந்நிகழ்ச்சிக்காக 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.75 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதுதவிர இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், இம்முறை பொதுமக்களில் ஒருவர் பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக நேர்காணல் வைத்து அந்த ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

34

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென அந்நிகழ்ச்சி துவங்கும் தேதி மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு வாரம் தள்ளிவைக்கட்டுள்ள அந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்ச்சி ஒரு வாரம் தள்ளிப்போனதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்... ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க மறுத்த பிரியங்கா மோகன்... காரணம் ‘அந்த’ கிசுகிசு தானாம்

44

மறுபுறம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்களும் அவ்வப்போது லீக்கான வண்ணம் உள்ளன. அதன்படி நடிகைகள் மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, தொகுப்பாளினிகள் டிடி மற்றும் அஞ்சனா, நடிகர் அஜ்மல், பாடகி சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, கவர்ச்சி நடிகை கிரண், டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோரின் பெயர்கள் இதுவரை லீக் ஆகி உள்ளன. இதில் அதிகாரப்பூர்வமாக யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தான் தொடங்கப்படும், ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் இருந்ததன் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து அதே நடைமுறையை பின்பற்றி வருகிறது பிக்பாஸ் குழு. 

இதையும் படியுங்கள்... பிரபல நடிகருடன் லிவ்விங் டுகெதரில் வாணி போஜன்... சின்னத்திரை நயன்தாரா குறித்து வெளியான ஷாக்கிங் சீக்ரெட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved