அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.... மீண்டும் பிக்பாஸில் பிந்து மாதவி - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு?
இந்தி மற்றும் தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் ஓடிடி-க்கான பிரத்யேகமான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு உள்ளது. நேற்று தொடங்கிய இந்நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.
உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் (BiggBoss) கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் (Raju) டைட்டில் வின்னர்களாகினர். சமீப காலமாக ஓடிடி தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால் அதில் படங்களை நேரடியாக வெளியிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்றி, ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த 3 வாரங்களாக கமல் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் அரசியல் பணிகள் மற்றும் சினிமா ஷூட்டிங் இருப்பதால் தற்காலிகமாக இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அவருக்கு பதில் நடிகர் சிம்பு (Simbu) தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், இந்தி மற்றும் தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் ஓடிடி-க்கான பிரத்யேகமான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு உள்ளது. நேற்று தொடங்கிய இந்நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். இதில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில் நடிகை பிந்து மாதவியும் (Bindu madhavi) போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் ஏற்கனவே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Yaanai movie : கோடை விடுமுறையில் முதல் ஆளாக கோதாவில் இறங்கிய அருண் விஜய் - யானை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு