விசித்ரா உடன் நடிக்க மாட்டேன் என்று ரகளை செய்த கவுண்டமணி.. அதுவும் இந்த காரணத்திற்காக..? என்னன்னு பாருங்க..
தனக்கும் கவுண்டமணிக்கும் இடையே நடந்த மனக்கசப்பு குறித்து விசித்ரா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா. பொற்கொடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விசித்ரா, சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல், எங்க முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 10 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விசித்ரா, குணச்சித்திர கதாப்பாத்திரம், கவர்ச்சி, காமெடி என பல வேடங்களில் நடித்துள்ளார்.
vichitra
ரசிகன், முத்து, சுயம்வரம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. கவர்ச்சி இல்லாமல் கவுண்டமணியோடு சேர்ந்து விசித்ரா நடித்த காமெடி படங்களை இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக பொண்ணு வீட்டுக்காரன் படத்தில் டயானா என்ற ஆங்கிலோ இந்தியன் கேரக்டர், வில்லாதி வில்லன் படத்தில் குணச்சித்திர நடிப்பு என 90களில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vichitra
இதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த அவர் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அவர் வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார். அவருக்கென தனி ரசிக பட்டாளமே இருக்கின்றனர்.
இந்த நிலையில் தனக்கும் கவுண்டமணிக்கும் இடையே நடந்த மனக்கசப்பு குறித்து விசித்ரா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பேசிய விசித்ரா “ நான் சின்ன சின்ன படங்களில் நடித்த போது அந்த படங்கள் எல்லாம் ஹிட்டானது. இதை தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி பிரபுவின் பெரிய குடும்பத்தில் நடிக்க நான் கமிட் ஆனான். அந்த படத்தின் பூஜை நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டில் நடந்தது.
vichitra
அப்போது அங்கிருந்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கையை பிசைந்துகொண்டே என்னை அழைத்தார். உனக்கும் கவுண்டமணிக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டார். நான் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறினேன். இல்லை இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறி என்னை அவரிடம் அழைத்து சென்றார். அப்போது கவுண்டமணிக்கு வணக்கம் சொல் என்று கே.எஸ் ரவிக்குமார் என்னிடம் சொன்னார். நான் வணக்கம் சார் என்றேன்.. அவ்வளவு பிரச்சனை முடிந்துவிட்டது என்று அழைத்து சென்றார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் படையெடுக்க உள்ள 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் இவங்கதானா - லீக்கான விவரம்
vichitra
அப்புறம் தான் எனக்கு தெரிந்தது நான் கவுண்டமணிக்கு வணக்கம் சொல்லவில்லையாம். அது எப்போது எங்கு நடந்து என்று கூட எனக்கு தெரியவில்லை.. ஆனால் கவுண்டமணி அதற்காக என்னை திமிரு பிடிச்ச பொண்ணு என்று கூறி என்னுடன் வேலை செய்ய மாட்டேன் என்று பெரிய ரகளையே செய்திருக்கிறார்.. என்னை பொறுத்த வரை என் வேலை முடிந்து உடன் நான் கிளம்பிவிட்டேன்.. ஷூட்டிங் முடிந்த உடன் அரட்டை அடிப்பது, பார்ட்டிக்கு செல்வது இதை எல்லாம் நான் செய்யவே மாட்டேன்.. என் வேலை முடிந்த உடன் நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.