இரண்டாவது கணவரை விட்டும் பிரிந்த பவானி ரெட்டி..! இது தான் பிக்பாஸ் வர காரணமாம்..!!
தற்போது பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் பவானி ரெட்டி, தன்னுடைய இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பவானி ரெட்டி, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி', சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து வருவதால் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
நடிகர் பிரஜன் நடித்து வந்த, 'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நந்தினி என்ற ரோலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு மற்றும் இன்றி, பிரஜினுக்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்துள்ளது.
நடிகர் பிரஜன் நடித்து வந்த, 'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நந்தினி என்ற ரோலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு மற்றும் இன்றி, பிரஜினுக்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்துள்ளது.
இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் எழ கணவர் பிரதீப், திருமணம் ஆன எட்டு மாதத்திலேயே, தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள, மீண்டும் பவானி ரெட்டி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
இதை தொடர்ந்து இவர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனந்த் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் பவானி ரெட்டி.
திருமணத்திற்கு பின், பிரபல தொலைக்காட்சியில் முக்கிய ரோலில் நடித்து வந்த 'ராசாத்தி' என்கிற சீரியலில் இருந்தும் விலகினார்.
தன்னுடைய இரண்டாவது கணவருடன், வாழ்ந்து வந்த இவர் நேற்று தன்னை பற்றி போட்டியாளர்கள் மத்தியில் கூறும் போது, பெற்றோரின் ஆசைக்காக அவர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அதுவும் இல்லாமல் போய் விட்டது என அழுதபடி தெரிவித்தார்.
வாழ்க்கையில் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும் என எழுதி இருக்கிறது போல, என்று கூறிய பின்னர்... இந்த மன உளைச்சலில் இருந்து எப்படி வெளியே வருவது என யோசித்து கொண்டிருந்த போது தான் விஜய் டிவியில் இருந்து பிக்பாஸ் அழைப்பு வந்தது. நானும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.