MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் நெஞ்சில் டாட்டூ குத்திய பிக்பாஸ் ரக்ஷிதா! என்ன போட்டுருக்காங்க பாருங்க!

த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் நெஞ்சில் டாட்டூ குத்திய பிக்பாஸ் ரக்ஷிதா! என்ன போட்டுருக்காங்க பாருங்க!

சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் டாட்டூ புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 19 2023, 12:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானவர். டஸ்க்கி ஸ்கின் டோனில் இவர் இந்த சீரியலில் நடித்ததால்... பலரும் இவர் கருப்பாக இருக்க கூடிய நடிகை என்றே நினைத்த நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் தான் இவர் கருப்பு நிறத்தில் தன்னை காட்டிக்கொள்ள மேக்கப் போட்டு நடித்தார் என்று தெரியவந்தது. மேலும் இந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததால், கருப்பான தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ரக்ஷிதா தெரிவித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இந்த சீரியலுக்கு பின்னர், சன் டிவியில் ஒளிபரப்பான 'இளவரசி' தொடரில் நடித்தார். இதை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் துவங்கப்பட்ட 'சரவணன் மீனாட்சி' சீசன் 2 தொடரில் நடிக்க துவங்கினார். சரவணன் கேரக்டரில் நடித்த பல நடிகர்கள் அடுத்தடுத்து மாறிய போதும், மீனாட்சி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார் ரக்ஷிதா. மேலும் 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சான் டியாகோ காமிக்-காம் 2023 நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற பிரபாஸ் - ராணா! வைரலாகும் புகைப்படம்!
 

34

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் இவர் நடித்து வந்த நிலையில், பல சின்னத்திரை பிரபலங்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு, ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது இந்த ஜோடி. இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஒரு கட்டத்தில் முற்றியதால் தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. தினேஷ் ரக்ஷிதாவுடன் வாழ விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ஏனோ சில காரணங்களால் ரக்ஷிதா தொடர்ந்து அவருடன் வாழ மறுத்து வருகிறார். 
 

44

சமீபத்தில் கூட, தினேஷ் மீது ரக்ஷிதா பொய் புகார் கொடுத்ததாக வெளியான  தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை சுற்றி பல பிரச்சனைகள் இருந்தாலும் பெரிதாக அதை கண்டுகொள்ளாமல், தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருக்கும் ரக்ஷிதா... தற்போது த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், ஆந்தையின் உருவத்தை நெஞ்சில் டாட்டூ குத்திகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு விரைவில் டும்.. டும்.. டும்! மணமகள் யார் தெரியுமா? குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image3
K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved