Asianet News TamilAsianet News Tamil

சான் டியாகோ காமிக்-காம் 2023 நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற பிரபாஸ் - ராணா! வைரலாகும் புகைப்படம்!

சர்வதேச திரைப்பட நிகழ்வான, 'சான் டியாகோ காமிக்-காம் 2023' நிகழ்ச்சியில் பங்கேற்க 'ப்ராஜெக்ட் கே' படக்குழுவுக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து, நடிகர் பிரபாஸ் அமெரிக்காவிற்கு சென்றதை உறுதி செய்யும் விதமாக அவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

project k movie hero prabhas and rana landed in America for san diego comic com 2023
Author
First Published Jul 18, 2023, 11:57 PM IST

அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்தாலும், தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வரும் பிரபாஸ், தற்போது பிரமாண்டமான அறிவியல் புனைகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ப்ராஜெக் கே படத்தில் நடித்து வருகிறார்.

ப்ராஜெக்ட் கே திரைப்படம், ஜூலை 20 முதல் 23 வரை நடைபெறும் சான் டியாகோ காமிக்-காம் 2023 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது.  ப்ராஜெக்ட் கே, படம் தான், சான் டியாகோ காமிக்-கானில் பங்கேற்கும் முதல் இந்தியத் திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. சான் டியாகோ காமிக் கான் நிகழ்வில் பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன், நாக் அஸ்வின் உள்ளிட்ட திரையுலகினர்பலர்  பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தற்போது பிரபாஸ் மற்றும் ராணா அமெரிக்காவில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

3 மணிக்கு போன் செய்து நடிகர் படுக்கைக்கு அழைக்கிறார்! 46 வயதில் பகீர் கிளப்பும் கமல் பட நடிகை!

project k movie hero prabhas and rana landed in America for san diego comic com 2023

சரோஜா தேவி கெட்டப்புக்கு மாறிய அதுல்யா ரவி! ஓல்டு இஸ் கோல்டு... சும்மா அள்ளுதே அழகு! ரீசென்ட் போட்டோஸ்!

மேலும் ப்ராஜெக்ட் கே என தற்காலிகமாக அழைக்கப்படும், இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர், சான் டியாகோ காமிக்-கானில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டைட்டில் மற்றும்  டீசர் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. கடந்த மூன்று படங்கள் பிரபாஸுக்கு அடுத்தடுத்த தோல்வியை தேடி கொடுத்ததே, இந்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம் என கூறலாம். ப்ராஜெக்ட் கே திரைப்படம் அடுத்த ஆண்டு  2024 ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தை, வைஜெயந்தி மூவிஸ் பேனரில் அஸ்வினி தத் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

Follow Us:
Download App:
  • android
  • ios