சரோஜா தேவி கெட்டப்புக்கு மாறிய அதுல்யா ரவி! ஓல்டு இஸ் கோல்டு... சும்மா அள்ளுதே அழகு! ரீசென்ட் போட்டோஸ்!
நடிகை அதுல்யா பழம்பெரும் நடிகை சரோஜா தேவி கெட்டப்பில் எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வேண்டும் என, முனைப்பு காட்டி வரும் கோயம்பத்தூர் பொண்ணு அதுல்யா ரவி... குறும்படங்கள் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பால்வாடி காதல் என்கிற ஷார்ட் ஃபிலிம்மில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு, இயக்குனர் சிவராஜ் தான் இயக்கிய 'காதல் கண் கட்டுதே' படத்தில் நடிக்கும் வாய்பபை வழங்கினார்.
2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, போன்ற பல படங்களில் நடித்தார். நன்கு தமிழ் பேசும் நடிகை என்பது இவரின் கூடுதல் பிளஸ் பாய்ட்டாக பார்க்கப்பட்டது.
ஒரே மாதிரியான கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்காமல், வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திர தேர்வு இவரை கவனிக்க வைத்தது. ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்தாலும்... பின்னர் கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கும் கவர்ச்சி காட்ட தயங்காதவர் என்பதை ஏமாளி படத்தின் மூலம் நிரூபித்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் அமலாபால், தயாரித்து நடித்த காடவர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது டீசல் எகிற படம் மட்டுமே இவரின் கைவசம் உள்ளது.
தமிழை தாண்டி 'மீட்டர்' என்கிற படத்தின் மூலம், தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். மேலும் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக, அடுத்தடுத்த சில போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சரோஜா தேவி கெட்டப்பில்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டை, சைடில் பூ என கொள்ளை அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.