பிக்பாஸ் வீட்டின் வெற்றியாளர் முதல்... 5 ஆவது இடத்தை பிடித்த போட்டியாளர் வரை..! வரிசை பட்டியல் இதோ..!
இன்று வெகு விமர்சையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில் இதில் முதலிடத்தில் இருந்து 5 ஆவது இடத்தை பிடிக்க உள்ள போட்டியாளர்கள் பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம், கோலாகலமாக தொடங்கிய தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.
16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல பிரச்சனைகள், போட்டிகள், விவாதங்கள் என சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகியது.
முதல் வாரம் யாரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறாத நிலையில், அடுத்த வாரம் முதல் ஆளாக ரேகா வெளியேறினார். அதன் பின்னர் வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, பாடகி சுசித்ரா, சனம் என 5 போட்டியாளர்களை தவிர அனைவரும் வெளியேறிவிட்டனர்.
அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அதிரடி காட்டினர். விஜே அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் கொளுத்தி போடும் வேலையை சிறப்பாக செய்தார்.
அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அதிரடி காட்டினர். விஜே அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் கொளுத்தி போடும் வேலையை சிறப்பாக செய்தார்.
அஜீத்தை தொடர்ந்து கடைசியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஷிவானி வெளியேறினார். தற்போது ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கேபி பிக்பாஸ் வீட்டுக்கு குட் பை சொன்னார்.
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் சேகர், ரம்யா ஆகியோர் பைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். நாளை வெகு விமர்சையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது.
இவர்களில் ஆரி தான் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இவரை தொடர்ந்து ரன்னராக பாலா, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது இடத்தை ரியோவும், நான்காவது இடத்தை ரம்யாவும் பிடித்துள்ளனர். கடைசி இடத்தை, டிக்கெட் டூ ஃபின்னாலேவில் வெற்றி பெற்று முதல் முதலாக இறுதி போட்டிக்குள் நுழைந்த சோம் சேகர் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.