shivani new movie : அட்ராசக்க.. ஷிவானிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு- நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் செம்ம ஹாட் ரோல்
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி. அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவரும் விதமாக போட்டோஷூட் நடத்திய ஷிவானிக்கு தற்போது கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் ஷிவானி. இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதுதவிர வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம், அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகை ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஷிவானி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
இதேபோல் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீட்ல விசேஷங்க’ என்கிற படத்திலும் ஷிவானி ஹீரோயினாக நடித்துள்ளார். இது பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
அண்மையில் பம்பர் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஷிவானி. இப்படத்தை செல்வகுமார் இயக்குகிறார். கேரளா லாட்டரியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஜீவி பட நாயகன் வெற்றி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷிவானி நடிக்க உள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகை ஷிவானிக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. வடிவேலுவின் தீவிர ரசிகையான ஷிவானி, தற்போது அவருடனே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளாராம்.