நீச்சல் குளம் அருகே ஹாட் போஸ் கொடுத்து... ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த பிக்பாஸ் ஷிவானி
நீச்சல் குளம் அருகே செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து நடிகை ஷிவானி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவானி. அதில் ஆரம்பத்தில் கொழுகொழுவென இருந்த அவருக்கு சைடு ரோல் கொடுக்கப்பட்டு வந்தது. பின்னர் உடல் எடையை சட்டென குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறியதால் அந்த சீரியலிலேயே ஹீரோயினாக புரமோட் ஆனார். அந்த சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்தார் ஷிவானி.
இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனின் போட்டியாளராக கலந்துகொண்ட ஷிவானிக்கு அந்நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
இதையும் படியுங்கள்... மானபங்கப்படுத்தியதாக பரபரப்பு புகார் அளித்த பார்வதி நாயர்... இளைஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் பாய்ந்தது வழக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்பு குவிந்தது. அதன்படி முதலில் விக்ரம் படத்தில் நடித்த இவர், அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல வீசேஷம், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்தார். அடுத்த வாரம் ரிலீசாக உள்ள வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறார் ஷிவானி.
இவ்வாறு பிசியான ஹீரோயினாக வலம் வரும் ஷிவானி, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், நீச்சல் குளம் அருகே செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து நடிகை ஷிவானி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... நயன்தாராவை போல் 37 வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்