மானபங்கப்படுத்தியதாக பரபரப்பு புகார் அளித்த பார்வதி நாயர்... இளைஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் பாய்ந்தது வழக்கு
நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜித்தின் என்னை அறிந்தால், கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், உதயநிதி ஸ்டாலினின் நிமிர், விஜய் சேதுபதி உடன் சீதக்காதி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் இருந்து விலையுயர்ந்த கடிகாரம், லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை காணாமல் போனதாக கடந்த அக்டோபர் மாதம், போலீசில் புகார் அளித்தார்.
மேலும் அந்த புகாரில் தனது வீட்டில் பணிபுரியும் சுபாஸ் சந்திரபோஸ் தான் இதை திருடி இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது சுபாஸ் சந்திரபோஸ் பார்வதி நாயர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறினார். அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தன்மீது எச்சில் துப்பி அசிங்கப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... நயன்தாராவை போல் 37 வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
இதனிடையே கடந்த மாதம் கமிஷனர் அலுவலகம் சென்ற நடிகை பார்வதி நாயர், சுபாஸ் சந்திரபோஸ் தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டி வருவதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு வந்தார். தற்போது அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஸ் சந்திரபோஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரம் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... வளைகாப்பு முடிந்த கையோடு சொகுசு கார் வாங்கிய சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்... அதன் விலை இத்தனை லட்சமா?