இது எங்க போய் முடிய போகுதோ..? கேரவனுக்குள் மணக்கோலத்தில் கொஞ்சி குலாவும் அமீர் - பாவனி! பொங்கும் நெட்டிசன்கள்
இந்த வாரம் 'பிக்பாஸ்' ஜோடி நிகழ்ச்சியில் மணக்கோலத்தில் வரவுள்ள அமீர் - பாவனி ஜோடி தற்போது, கேரவனுக்குள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்ட் மூலம், தங்களுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் போட்டியாளர்கள்.
இதில் கலந்து கொண்டுள்ள ரீல் மற்றும் ரியல் ஜோடி அனைவருமே, ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர்கள் என்பதால், இந்த டான்ஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
மேலும் செய்திகள்: ரஜினிகாந்த் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்! வைரலாகும் வீடியோ..!
செமி பைனலை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சிக்கு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர், நடுவர்களாக இருந்து... போட்டியாளர்களை ஊக்குவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை விட, இரண்டாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. இதற்க்கு முக்கிய காரணம், இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் என்றே கூறலாம்.
மேலும் செய்திகள்: ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த தமன்னா! போயும்... போயும்.. இப்படி ஒரு கதாபாத்திரமா? லேட்டஸ்ட் அப்டேட்!
கடந்த வாரம், ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண் கெட்டப்பில் வந்து, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினர். நிஜ பெண்கள் போலவே இவர்களது தோற்றம் இருந்ததாக ரசிகர்கள் வெகுவாக போட்டியாளர்களை பாராட்டி இருந்தனர்.
இதை தொடர்ந்து, இந்த வாரம்... மணக்கோலத்தில் போட்டியாளர்கள் வர உள்ளனர். ஏற்கனவே பாவனி கழுத்தில் அமீர் தாலி கட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வளைத்ததில் வெளியானது. இதை தொடர்ந்து தாமரை தன்னுடைய கணவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலானது.
மேலும் செய்திகள்: பிரபல காமெடி நடிகர் கவலைக்கிடம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
தற்போது அமீர் - பாவனி இருவரும் கேரவனுக்குள், ரொமான்டிக் பார்வையால்... கொஞ்சி குலாவும் போட்டோஸ் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், இது எங்கு போய் முடிய போகிறதோ என பொங்கி வருகிறார்கள்.