MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த தமன்னா! போயும்... போயும்.. இப்படி ஒரு கதாபாத்திரமா? லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த தமன்னா! போயும்... போயும்.. இப்படி ஒரு கதாபாத்திரமா? லேட்டஸ்ட் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடிகை தமன்னா, நடிக்க உள்ள கதாபாத்திரம் குறித்து தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 13 2022, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'அண்ணாத்த' பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், குடும்பமாக பார்க்கக்கூடிய ஒரு சிறந்த படம் என ஒருதரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், சூப்பர் ஸ்டாரின் மாஸ் காட்சியை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றமாகவே அமைந்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இதைத்தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்கிய நிலையில், தற்போது ரஜினி கலந்து கொள்ளாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: பிரபல காமெடி நடிகர் கவலைக்கிடம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
 

37

மேலும் இந்த படம் குறித்து அவ்வபோது சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் நடிகை தமன்னா யாரும் எதிர்பார்க்காத கெட்டப்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

47

ஏற்கனவே 'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளதாகவும், மிக முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.  சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூட ரம்யா கிருஷ்ணன் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க உள்ள தகவலை உறுதி செய்தார்.

மேலும் செய்திகள்: ஃபுல் ரொமான்ஸ்... லிப் லாக் காட்சியோடு திருமண வீடியோவை முதல் முறையாக வெளியிட்ட ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி!
 

57

 அதே போல் இந்த படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் சிவகார்த்திகேயனும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது தமன்னாவும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.
 

67

தமன்னா 'ஜெயிலர்' படத்தில் யாரும் எதிர்பார்த்திராத நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் முதல் படத்திலேயே தமன்னா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்: ஏடாகூடமாக புடவையை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு படு மோசமாக போஸ் கொடுத்த 'சார்பட்டா' பட நடிகை சஞ்சனா நட்ராஜன்!
 

77

அதேபோல் சிலர் ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் தமன்னா அவருக்கு ஜோடியாக நடித்த வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், தமன்னா இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பாரா? அல்லது பிளாஷ் பேக் காட்சியில் ஹீரோயினாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved