- Home
- Cinema
- மஞ்ச காட்டு மைனாவை போல் மாறி... கியூட் உடையில் கூல் போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜனனி! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
மஞ்ச காட்டு மைனாவை போல் மாறி... கியூட் உடையில் கூல் போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜனனி! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
இலங்கையை சேர்ந்த தொகுப்பாளாரான ஜனனி தற்போது மஞ்சள் நிற உடையில், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் ஜனனி.
லாஸ்லியாவை போல, இலங்கையை சேர்ந்த போட்டியாளரான இவர்... அறிமுகமான அன்றே தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
பிக்பாஸ் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா?வெளியான புகைப்படம்.. ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!
ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்த ஜனனி, பின்னர் தேவை இல்லாமல் சில இடங்களில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற துவங்கினார்.
70 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து விளையாடிய பின்னர் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் ஜனனி, தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர்... மீண்டும் இலங்கைக்கு கூட செல்ல முடியாத அளவுக்கு இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் அவரே தெரிவித்திருந்தார்.
மேலும் அவ்வப்போது, ரசிகர்கள் மனதை மயக்கும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி வரும் ஜனனி தற்போது... மஞ்ச காட்டு மைனாவை போல், பளீச் உடையில் பேரழகியாய் ஜொலிக்கும் போட்டோஸ் , வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சேலையில் அம்மா தேவயானியை மிஞ்சிய அழகு! கியூட் தேவதை போல் ஜொலிக்கும் மகள் இனியாவின் புகைப்படம் வைரல்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.