அடி ஆத்தி... கல்கத்தா காளியாக அவதாரம் எடுத்த பிக்பாஸ் வனிதா... செம்ம டெரர் லுக் போட்டோஸ்...!
கொல்கத்தா காளி கெட்டப்பில் செம்ம டேரராக தயாராகியிருக்கும் புகைப்படங்களை வனிதா விஜயகுமார் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மீண்டும் ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதன் பின்னர் பீட்டர் பால் உடனான திருமண விவகாரத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த வனிதா, மீண்டும் சிங்கப்பெண்ணாக எழுந்து நின்றார். தன்னுடைய யூ-டியூப் சேனல், பட வாய்ப்புகள் என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, தற்போது பிக்பாஸ் பிரபலங்களை வைத்து ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இதில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து வனிதா ஆடிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது அடுத்த எபிசோட்டிற்காக காளி கெட்டப்பில் நடனமாடி உள்ளார் வனிதா விஜயகுமார்.
அதற்காக கொல்கத்தா காளி கெட்டப்பில் செம்ம டேரராக தயாராகியிருக்கும் புகைப்படங்களை வனிதா விஜயகுமார் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
காளி கெட்டப்பில் எடுத்துக் கொண்ட செல்ஃபியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வனிதா விஜயகுமார், கொல்கத்தா காளி, அவளுடைய கோபம் தீமைகளை அழிக்கும்.. கர்மா தொடங்குகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
அச்சு அசலாக காளி கெட்டப்பிற்கு பக்காவாக பொருந்தியுள்ள வனிதாவின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. ரேகா, அம்பிகா போன்ற நடிகைகள் கூட வனிதாவின் காளி கெட்டப்பை பார்த்து புகழ்ந்து தள்ளியுள்ளனர்.