பிக் பாஸ் வைத்த ட்விஸ்டால் தலைகீழாக மாறப்போகும் ரிசல்ட்! ஓட்டிங்கில் யார் முன்னிலை?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் பைனல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிலையில், ஓட்டிங்கில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
Bigg Boss Tamil season 8
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனும் பல்வேறு புதுமைகளுடன் இருக்கும். அந்த வகையில் கடந்த சீசனில் இரண்டு வீடுகளுடன் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, இம்முறை வீட்டிற்கு நடுவே ஒரு கோடு போட்டு, ஆண்கள் தனி அணியாகவும், பெண்கள் தனி அணியாகவும் பிரிக்கப்பட்டு பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற தீமில் தொடங்கியது. இது பெரிய அளவில் சுவாரஸ்யமாக இல்லாததால் 50 நாட்களில் நடுவில் உள்ள கோட்டை அழித்து இருவரும் சேர்ந்து விளையாடலாம் என அறிவிக்கப்பட்டது.
Bigg Boss FinaliSt
அந்த கோட்டை அழித்த பின்னர் தான் இந்த சீசன் சூடுபிடிக்க தொடங்கியது. குறிப்பாக டெவில் டாஸ்க், லேபர் டாஸ்க், பொம்மை டாஸ்க், செங்கல் செங்கலா டாஸ்க் ஆகியவை விறுவிறுப்பை கூட்டும் விதமாக அமைந்திருந்தன. அதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கும் அனல்பறந்தது. அதில் நடைபெற்ற 10 டாஸ்குகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த ரயான் நேரடியாக பைனலுக்குள் நுழைந்தார்.
இதையும் படியுங்கள்... என்னடா இப்படி இறங்கிட்டீங்க! செளந்தர்யாவை டைட்டில் வின்னர் ஆக்க நடக்கும் மோசடி
Jacquline, Soundariya
இதையடுத்து கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் தீபக் மற்றும் அருண் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இறுதியாக ஜாக்குலின், செளந்தர்யா, முத்துக்குமரன், விஷால், பவித்ரா, ரயான் ஆகியோர் வெற்றிகரமாக பினாலே வாரத்திற்குள் காலடி எடுத்து வைத்தனர். அவர்களில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்து விடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியானாலும், இரண்டம் இடத்துக்கான போட்டி ஜாக்குலின், விஷால், செளந்தர்யா ஆகியோருக்கு இடையே இழுபறியாக இருந்தது.
Jacquline Eliminated
அதிலும் ஜாக்குலின் மற்ற இருவரை விட கூடுதலாக வாக்குகளை பெற்று வந்ததால் அவர் தான் இரண்டாம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணப்பெட்டி டாஸ்கை கொடுத்து ரிசல்டை தலைகீழாக மாற்றி இருக்கிறார் பிக் பாஸ். அதன்படி பணப்பெட்டி டாஸ்கில் 6 பேரும் பங்கேற்று குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வந்து சேவ் ஆகிவிட்டனர். ஆனால் இறுதியாக 8 லட்சத்துக்கான பணப்பெட்டியை எடுக்கப்போன ஜாக்குலின் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்குள் டாஸ்கை முடிக்காததால் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.
Bigg Boss Final Voting
2 விநாடிகள் தாமதமாக வந்ததால் ஜாக்குலின் இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்படுவதாக அறிவித்தார் பிக் பாஸ். இதையடுத்து கண்ணீருடன் வெளியேறினார் ஜாக்குலின். அவரின் எவிக்ஷனால் தற்போது பைனல் ரிசல்டே மாறி இருக்கிறது. தற்போது முத்துக்குமரனுக்கு அடுத்த படியாக அதிக வாக்குகளை பெற்று செளந்தர்யா இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேபோல் விஷாலும் அவருக்கு டஃப் கொடுத்து வருகிறார். இதனால் இரண்டாம் இடத்தை விஷால் அல்லது செளந்தர்யா ஆகிய இருவரில் ஒருவர் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் அவர் செளந்தர்யாவை விட டபுள் மடங்கு அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சாதனையோடு எலிமினேட் ஆன ஜாக்குலினுக்கு பிக் பாஸ் கொடுத்த விலை மதிப்பில்லா பரிசு!