PR டீம் சிறப்பா வேலை செய்றாங்க! சௌந்தர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நேரத்தில், சக போட்டியாளர்கள் டைட்டிலை கைப்பற்ற தற்போது மற்ற போட்டியாளர்கள் மீது வெளிப்படையாக தங்களின் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள் அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோ இதோ.
Bigg Boss tamil season 8
விஜய் டிவியில் 106 நாட்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் ரசிகர்களை விட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக பிள்ளையார் சுழி போட்டது, ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலும். தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பிரபலமடைய முக்கிய காரணம் உலக நாயன் கமல் ஹாசன் தான்.
Jaquline
2017-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு புரிதலை ரசிகர்கள் மத்தியில் கொண்டு வந்தவர் கமல்ஹாசன் தான். பின்னர் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை பார்க்க துவங்கினர். அதே நேரம் ஒரு நாள் முழுவதும் நடக்கும் விஷயங்களை 1 மணிநேரமாக சுருக்கி தான் விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. மொத்த போட்டியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் பார்க்க விரும்பினால் அவர்கள் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24/7 ஓடும் லைவ் நிகழ்ச்சியை பார்க்கலாம்.
58 வயசானாலும் வேகம் குறையாத இசைப்புயல்! ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Pavithra Janani
வெற்றிகரமாக பிக்பாஸ் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த முறை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற முக்கிய காரணம், AI தொழில்நுட்பம் குறித்து அமெரிக்கா சென்று படிப்பதாகவும், அடுத்தடுத்து அவர் கைவசம் உள்ள திரைப்படங்களை எந்த ஒரு தாமதமும் இன்றி முடித்து கொடுக்கவும் தான். கமல் விலகிய நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே, தனக்கே உரிய பாணியில் கிண்டல் - நக்கலை தாண்டி பல விஷயங்களில் தன்னுடைய கண்டனத்தை நேரடியாக விஜய் சேதுபதி கூறினார்.
Muthukumaran
கமல் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா? என சந்தேகத்துடன் இருந்த ரசிகர்களுக்கும் இவர் தொகுத்து வழங்கிய விதம் வாய்பிளக்க வைத்தது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கே இப்போது தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கிய நிலையில், ஒருவழியாக 92 நாட்களை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களே பிக்பாஸ் முடிவடைய உள்ள நிலையில், கடந்த வாரம் நடந்த TTF டாஸ்கில், வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த, ரயான் வெற்றிபெற்றார். இவருக்கு விஜய் சேதுபதியே உள்ளே வந்து அதற்கான டிக்கெட் ஒன்றை கொடுத்தார்.
ஹனி ரோஸ் பகீர் குற்றச்சாட்டு; பொதுவெளியில் நடக்கும் அவமானம் - யார் அந்த நபர்?
Soundharya Using PR Team For Promotion
இதை தொடர்ந்து இன்றைய தினம், டைட்டிலை கைப்பற்ற முட்டி மோதும் ரசிகர்கள்... சௌந்தர்யா PR டீம் வைத்து தான், தன்னை பிரபலப்படுத்தி கொள்வதாக கூறி அவரை கதற வைத்துள்ளனர். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சௌந்தர்யா, தீபக் மற்றும் ரயானிடம் பேசும் போது, லைஃபில் எப்படி தான் மேலே வருவது என தெரியவில்லை என கண்ணீர் விட்டு அழுகிறார். இதை தொடர்ந்து பேசும் முத்து குமரன், சோசியல் மீடியா முழுவதும் அதிகமான ஃபேன் பேஜ் வைத்து, எல்லாவற்றையும் போட்டு கொண்டே இருக்கிறார்கள் என்றால் அது சௌந்தர்யாவுக்கு தான் என கூறுகிறார்.
Soundharya Crying
இதை தொடந்து பேசும் பவித்திராவும், அவர் மீது அதிகம் கவனம் செலுத்த பட்டது. பிஆர் டீம் நன்கு வேலை செய்துள்ளார்கள் என நினைக்கிறன் என வெளிப்படையாக போட்டு தாக்கினார். சௌந்தர்யாவை தோழி என கூறி சுற்றி கொண்டிருந்த ஜாக்குலினும், அவள் ஒரு தவறு செய்கிறார் அந்த தப்பை தாண்டி அவள் செய்யும் விஷயம், மிகவும் கியூடாக இருக்கிறது. அதை புரமோட் செய்யும் போது இந்த தவறுகள் மறைக்க பட்டுவிடுகிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது என பேசுகிறார். இதுபோல் ஒருவர் பின் ஒருவராக தன்னை பற்றி சொல்லும் போது, PR டீம் மூலம் தான் நான் இந்த இடத்திற்கு வந்தேன் என்பது போல் சொல்கிறார்கள் என கூறி, அழுகிறார். இந்த புரோமோ தான் இப்போது வைரலாகி வருகிறது. சௌந்தர்யா உண்மையில் PR டீம் மூலம் தான் இந்த இடத்திற்கு வந்தாரா? உங்கள் கருத்து என்ன என்பதையும் சொல்லுங்கள்.
நடிகர் பிரபுவுக்கு என்ன ஆச்சு? மூளையில் நடந்த அறுவை சிகிச்சை - வெளியான பரபரப்பு தகவல்!