- Home
- Cinema
- 3 வயதில் அம்மாவுடன் நடுத்தெருவில் நின்றேன்! பிக்பாஸ் 8 போட்டியாளர் அன்ஷிதாவின் கண்ணீர் கதை!
3 வயதில் அம்மாவுடன் நடுத்தெருவில் நின்றேன்! பிக்பாஸ் 8 போட்டியாளர் அன்ஷிதாவின் கண்ணீர் கதை!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சீரியல் நடிகை அன்ஷிதா தன்னுடைய அம்மா குறித்தும், சிறு வயதில் எவ்வளவு துயரங்களுக்கு நடுவே வளர்ந்தேன் என்பது பற்றியும், முதல் முறையாக தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

Bigg Boss Contestant Anshitha
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கிய நிலையில், இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இவர்களில் கடந்த வாரம் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறிய நிலையில், தற்போது 17 போட்டியாளர்கள் முட்டி மோதி கொண்டு விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழையும் போதே... காதல் சர்ச்சையில் சிக்கியவர் தான் விஜய் டிவி 'செல்லம்மா' தொடரில் நடித்து வந்த நடிகை அன்ஷிதா.
அதாவது அன்ஷிகா, 'செல்லம்மா' தொடரில் நடித்து வந்த நடிகர் அர்னவ், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரிந்தும், அவருடன் பழகி வந்ததாக கூறப்பட்டது. அர்னவின் மனைவி திவ்யா ஸ்ரீதர் இதுகுறித்து பேசி, காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்னவ் தரப்பில் இருந்து, இந்த குற்றச்சாட்டு மறுக்கப்படவில்லை என்றாலும், அவர் திவ்யாவை விட்டு விலகி, இதுவரை அவருடைய குழந்தையை கூட பார்க்காமல் தான் உள்ளார்.
Arnav And Anshitha Controversy
மேலும் அன்ஷிதா, தன்னை மிரட்டியதாக திவ்யா ஸ்ரீதர் கூறினார். பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழையும் போதே... "அன்ஷிதா பல நல்ல விஷயம் செய்தால் கூட அது வெளியே தெரிவது இல்லை. சின்ன தப்பு செய்தால் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது என கூறியது, தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டது போலவே பார்க்கப்பட்டது". பிக்பாஸ் வீட்டில் மற்ற விஷயங்களில் அன்ஷிதா எதார்த்தமாக நடந்து கொண்டாலும், அர்னவ் விஷயத்தில் நடிப்பதாகவே பலர் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவருடைய வாழ்க்கையில்... சிறு வயதில் இருந்தே எப்படி பட்ட கஷ்டங்களை அனுபவித்துள்ளார் என்பதை, தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொண்ட பழைய பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதில் அன்ஷிதா பேசும் போது... "தன்னுடைய அம்மா எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, தன்னுடைய முறை பையனை காதலித்தார். பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். அப்பா, அவருடைய வீட்டுக்கு என் அம்மாவை அழைத்து சென்று விட்டார். 15 வயதில் என்னுடைய அம்மாவுக்கு என் அண்ணன் பிறந்தார். 17 வயதில் நான் பிறந்தேன்.
மனைவி தர்ஷனா உடனான விவாகரத்து; முதல் முறையாக வாய் திறந்த விஜய் ஏசுதாஸ்!
Anshitha Tearful Life
20 வயதில், ஒற்றைத் தாயாக என்னையும் என் அண்ணனையும் கையில் பிடித்துக் கொண்டு, என அம்மா நடுத்தெருவில் நின்னார். என்னுடைய அப்பா என் அம்மாவை விட்டுவிட்டு சென்றுவிட்டார். ஒரு பொண்ணு திருமணம் செய்து கொள்ள வேண்டிய 20 வயதில் தன்னுடைய வாழ்க்கையை இழந்து நின்றார். அந்த சமயத்தில் யாருமே என் அம்மாவுக்கு உதவி செய்வதற்கு கூட வரவில்லை. அந்த ஒரு நிமிடத்தில் இருந்து, இவங்களுக்கு வந்த தைரியம் தான்... இன்று நானும், என் அண்ணனும் ஒரு நல்ல நிலையில் இருக்க காரணம்.
இதை தொடர்ந்து, ஒரு ஒற்றைத் தாயாக இரண்டு குழந்தைகளை வளர்த்த அனுபவம் பற்றி பேசிய அன்ஷிதாவின் தாய், "அந்த நிமிடத்தில் எனக்கு தன்னுடைய குழந்தைகள் மட்டும் தான் மனதில் நின்றார்கள். என் பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பது மட்டும்தான் நினைத்தேன். அந்த வைராக்கியத்தோடு தான் என் 2 பிள்ளைகளை வளர்த்து, இந்த நிலைக்கு ஆளாகினேன். நடுத்தெருவில் அன்று நின்ற போது கூட, என் மனதில் யாரும் ஒரு ரூபாய் கூட என் குழந்தைகளுக்கு கொடுத்து, அதில் நான் அவர்களை வளர்க்க கூடாது. நான் உழைத்து என் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் இருந்தது. இப்போதும் கடவுள் தான் எங்களை நன்றாக வைத்திருக்கிறார் என நம்புவதாக உருக்கமாக பேசியுள்ளார்.
Anshitha About Mother
தன்னுடைய தோழி ஒருவர் மூலம், துபாய்க்கு சென்று வேலை செய்து தான் அன்ஷிதாவையும் அவரது அண்ணனையும் ஆளாக்கினாராம் அவர் அம்மா. அதன் பின்னர் அம்மா அவர்களுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு, எங்களுக்கு ஒரு வீடு எடுத்து தங்க வைத்து பார்த்துக் கொண்டார். இதுவரை எங்க ரெண்டு பேருக்குமே எந்த ஒரு குறையும் அவங்க வைத்ததில்லை. நாங்க இப்போ வரைக்கும் காசுக்காக எங்க அப்பா முதல் கொண்டு யாரிடமும் நின்றது கிடையாது.
பின் வாங்கிய லப்பர் பந்து! அக்டோபர் 18 ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
Anshitha Painful Life story
அவங்களை பார்த்து வளர்ந்ததால், அந்த ஒரு இம்பாக்ட் தான் என்னுடைய வாழ்க்கையிலும் உள்ளது. நானும் என்னுடைய 18 வயதில் இருந்தே, என்னுடைய குடும்பத்திற்கு சப்போர்ட் செய்ய துவங்கி விட்டேன். நான் மிகவும் பெருமையாக இதை சொல்வேன். என்னுடைய அம்மா, அண்ணன், என்னுடைய குடும்பத்தை மிகவும் அழகாக பார்த்துக் கொள்வேன். நானும் எந்த ஒரு நபரிடமும் சென்று என்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு ரூபாய் கேட்டு நிக்க மாட்டேன். இப்போது என்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் சில மோசமான சம்பவங்கள் வாழ்க்கையில் இருந்தால் தான்... நல்ல எதிர்காலமும் அமைகிறது என பேசியுள்ளார்.