MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தீவிரமடைந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பணிகள் ! உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

தீவிரமடைந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பணிகள் ! உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது இதற்கான போட்டியாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் பிரபலங்கள் யார் யார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Aug 14 2024, 06:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Bigg Boss

Bigg Boss

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கிய முதல் சீசனில் இருந்து, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் உலகநாயகன் கமலஹாசன் தான். ஆனால் அதிரடியாக சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னுடைய பணிகள் காரணமாக வெளியேறுவதாகவும் அறிக்கை வெளியிட்டு அறிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Vijay Sethupathi

Vijay Sethupathi

இதைத்தொடர்ந்து விஜய் டிவி தரப்பில் இருந்தும் கமலஹாசன் விலகுவதை உறுதி செய்தனர். கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகிய பின்னர், அவருக்கு பதில் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சரத்குமார், விஜய் சேதுபதி, நயன்தாரா, அரவிந்த்சாமி, ரம்யா கிருஷ்ணன், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்களின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றது.

தங்கலான்: விடுதலை நாளில் வெளியீடு உறுதியா?

38
Kamalhaasan Advice to Vijay Sethupathi

Kamalhaasan Advice to Vijay Sethupathi

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியுடன், கமலஹாசன் 'விக்ரம்' படத்தில் நடத்ததன் மூலம் மிகவும் நெருக்கமானவர் என்பதால், பிக்பாஸ் குறித்த சில அறிவுரைகளையும் விஜய் சேதுபதிக்கு வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது.  இதைத்தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்  நிகழ்ச்சியாளர்கள். எனவே இந்த முறையும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48
Archana boyfriend Arunkumar

Archana boyfriend Arunkumar

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில்  கிட்டத்தட்ட மூன்று பேர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் 7 நிகழ்சியில் டைட்டில் வின்னரான அர்ச்சனாவின் காதலர் என கூறப்படும் அருண், பட வாய்ப்புக்காக சில வருடங்களாகவே போராடி வரும் நிலையில், இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறக்க சிபாரிசு செய்துள்ளதாகவும், அர்ச்சனா அருணுக்கு பல அட்வைஸுகளை கொடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. எனவே இந்த முறை அருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தலையில் வெள்ளை ரிப்பன்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அழகில் மின்னும் கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்!
 

58
Farina

Farina

இவரைத் தொடர்ந்து ஃபரீனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் 
கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 'பாரதி கண்ணம்மா' போன்ற விஜய் டிவி தொடர்களில் நடித்துள்ளார். அதேபோல் 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சியிலும், கோமாளியாக வந்து கலக்கினார். தற்போது தன்னுடைய உடலை வில்லாக வளைத்து யோகா செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் ஃபரீனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் இப்படி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

68
TTF Vasan And Shalin Zoya

TTF Vasan And Shalin Zoya

அதே போல் டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் சோயா இந்த முறை, தன்னுடைய காதலர் டிடிஎஃப் வாசனுடன் இணைந்து பிக் பாஸ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் ஏற்கனவே குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின், அதன் மூலம் சில பட வாய்ப்புகளை கைப்பற்றிய நிலையில், இவர் நடித்த 'செம்பி' படத்திற்கு பின்னர் பெரிதாக எந்த படமும் இவருக்கு கை கொடுக்காததால் தற்போது அஸ்வின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?
 

78
Ashwin Kumar

Ashwin Kumar

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினுக்கும், ஷிவாங்கிக்கும் , இடையே இருந்த காம்போ அதிகம் பேசப்பட்டதால் ஷிவாங்கியையும் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிகள் களம் இறக்க முடிவு செய்து அவரையும் விஜய் டிவி தரப்பு அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் இருந்து, சில தொகுப்பாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் களம் இறங்குவது தொடர்கதையாக உள்ளதால், பிரியங்கா, அர்ச்சனா, போன்ற தொகுப்பாளர்களை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த முறை மாகாபா செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கலக்கப்போவது யாரு காமெடியன் ராமரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார்.
 

88
Amala Shaji

Amala Shaji

'காத்து மேல' பாடல் மூலம் அதிகம் கவனம் ஈர்த்த கானா பாடகர் பால் டப்பா இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாகவும், இவரை தொடர்ந்து சுசி லீக்ஸ் சர்ச்சை ராணி சுசியின் முன்னாள் கணவர்  கார்த்திக் குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளாராம். அதே போல் பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தில் விதவிதமான விடியோக்களை வெளியிட்டு வரும் அமலா ஷாஜியின் பெயரும் பிக்பாஸ் பட்டியலில் அடிபடுகிறது. இவர்களை தவிர சில மாடல்கள், திருநங்கை பிரபலங்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர், இலங்கை பிரபலங்கள், ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகின் இருண்ட பக்கம்: அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை எதிர்கொண்ட 5 நடிகைகள்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved