- Home
- Cinema
- ஆறாத ரணமாக உள்ள முதல் காதலியின் இறப்பு; 5 முறை தற்கொலைக்கு முயன்றேன் - பகீர் கிளப்பிய பிக் பாஸ் சத்யா
ஆறாத ரணமாக உள்ள முதல் காதலியின் இறப்பு; 5 முறை தற்கொலைக்கு முயன்றேன் - பகீர் கிளப்பிய பிக் பாஸ் சத்யா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கேப்டனாக உள்ள சத்யா, தன்னுடைய முதல் காதல் கைகூடாமல் போனது பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார்.

Sathya
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட கஷ்டங்களைப் பற்றி மனம்விட்டு பேசி உள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இந்த வார கேப்டனாக இருக்கும் சத்யா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முதல் காதல் கைகூடாமல் போனது பற்றி மனம்விட்டு பேசினார். அவரின் பேச்சை கேட்டு சக போட்டியாளர்கள் கண்கலங்கி அழுதுள்ளனர். அப்படி அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
Bigg Boss Tamil season 8
சத்யா கூறியதாவது : நான் ஒரு நல்ல வசதியான குடும்பத்தில் தான் பிறந்தேன். 5ம் வகுப்பு படிக்கும்போது என்னுடைய பெற்றோர் என்னை பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் அப்பத்தா வீட்டில் தான் வளர்ந்தேன். ஒரு கட்டத்தில் அப்பத்தாவுக்கும் வயசானதால் அவரால் என்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் போர்டிங் ஸ்கூலில் என்னை சேர்த்துவிட்டனர். அங்கு ஒரு பெண் மீது காதலில் விழுந்தேன். அந்த காதல் ஸ்கூல் முடித்து காலேஜ் படிக்கும் போதும் தொடர்ந்தது.
Bigg Boss Contestant Sathya
ஒரு கட்டத்தில் அந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரிந்ததும், அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். நல்லபடியாக காதல் வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஒரு போன் கால் வந்தது. அவள் இறந்துவிட்டால் என்று அந்த போன் காலில் சொன்னார்கள். எனக்கு ஒன்னுமே புரியவில்லை. என்னுடைய முதல் காதலி என்னிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு சிலர் சேர்ந்து அவளை ரேப் பண்ணிவிட்டார்கள்.
இதையும் படியுங்கள்... நாமினேஷனில் சிக்கிய 11 பேர்; பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?
Bigg Boss contestants
ரேப் பண்ணி அவள அபியூஸ் பண்ணி ஒரு ரயிலே டிராக்ல தூக்கி போட்டுட்டாங்க. அந்த பிரிதலை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்த பிரிதலுக்கு பின் நான் 5 வாட்டி தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். அது என் கோலைத்தனம் தான். ஆனால் நான் உயிருக்கு உயிராக காதலித்த பொண்ணு என்னவிட்டு போயிட்டு, என் பெற்றோரும் என்னைவிட்டு போய்விட்டார்கள் என்கிற கவலையில் தான் இந்த கோலைத்தனத்தை நான் செய்தேன்.
Bigg Boss Contestant Sathya Love Story
அதன்பின்னர் நான் போதைக்கு அடிமையானேன். அதன்பின்னர் சினிமா கெரியர் தான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. என்னுடைய முதல் காதலியை மறக்க கூடாது என்பதற்காக தான் கையில் இந்த ஹார்ட் பீட் டாட்டூவை போட்டிருக்கிறேன். சினிமாவுக்கு உள்ளே வந்த பின்னர் எனக்கு இன்னொரு காதல் வந்தது. அது தான் என்னுடைய மனைவி ரம்யா. இந்த கதையில் நான் சொல்ல வருவது என்னவென்றால், ஒரு பெற்றோராக ஈஸியாக சண்டைபோட்டு பிரிந்துவிடலாம். ஆனா அந்த குழந்தையோட மனநிலையை பற்றி யோசிச்சு இந்த முடிவை எடுக்க வேண்டும் என ஃபீல் பண்றேன்” என்கிற மெசேஜ் உடன் சத்யா தன்னுடைய கதையை முடித்தார். அவரின் கதையை கேட்டதும் அங்கிருந்த போட்டியாளர்கள் கண்கலங்கி அழுதுள்ளனர்.
இதையும் படியுங்கள்... 5 இல்ல 6 பேர்; வைல்டு கார்டு எண்ட்ரியில் ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்! யார் அந்த 6 பேர்?