MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக் பாஸ் இவ்ளோ கல்நெஞ்சக்காரரா? கெஞ்சு கேட்டும் நிறைவேறாமல் போன மஞ்சரியின் ஆசை!

பிக் பாஸ் இவ்ளோ கல்நெஞ்சக்காரரா? கெஞ்சு கேட்டும் நிறைவேறாமல் போன மஞ்சரியின் ஆசை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகும் முன்னர் மஞ்சரி தன் மகனுக்காக கண்ணீர்விட்டு கேட்ட விஷயத்தை பிக் பாஸ் தர மறுத்த சம்பவம் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 06 2025, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Manjari

Manjari

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டவர் மஞ்சரி. இவர் முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் பிக் பாஸில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்களில் ஒருவராக எண்ட்ரி கொடுத்த மஞ்சரி, இந்த வீட்டில் சிறப்பாக கேம் விளையாடி 90 நாட்கள் வரை தாக்குப்பிடித்து நேற்று எலிமினேட் ஆனார்.

25
Bigg Boss Manjari

Bigg Boss Manjari

மஞ்சரியின் எவிக்‌‌ஷன் பிக் பாஸில் உள்ள சக போட்டியாளர்களுக்கே ஷாக்கிங் ஆக இருந்தது. ஏனெனில் பைனல் வரை செல்லும் தகுதி உடைய போட்டியாளர்களில் ஒருவராக மஞ்சரி இருந்தார். ஆனால் அவரின் இந்த எவிக்‌ஷன் ஒரு unfair எவிக்‌ஷனாகவே பார்க்கப்பட்டது. பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறும் முன் மஞ்சரிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பேசிய அவர், யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... PR டீம் சிறப்பா வேலை செய்றாங்க! சௌந்தர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்!

35
Manjari Eliminated

Manjari Eliminated

தொடர்ந்து மஞ்சரியின் நெருங்கிய நண்பரான முத்துக்குமரன் பேசுகையில், மஞ்சரி எனக்கு பிரண்ட் இல்ல, என்னுடைய கூட பிறந்த அக்காவாக மஞ்சரி வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என பிரியப்படுகிறேன். நான் இந்த வீட்டில் ஒருவருக்காக நிற்க வேண்டும் என நினைத்தேன் என்றால் அது மஞ்சரிக்காக மட்டும் தான். அதனால் தான் மஞ்சரி என்னை ஜெயித்துவிட்டார் என சொன்னேன். ஒரு பெரிய ரகசியம் என்னவென்றால், எனக்கு யாரைப் பார்த்தும் பொறாமை இருக்காது. ஆனால் மஞ்சரி, ஜாக்குலின் கிட்டயோ, ரயான் கிட்டயோ, தர்ஷிகா கிட்டயோ பேசும் போது எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கும் என எமோஷனலாக பேசினார்.

45
Manjari Last Wish in Bigg Boss

Manjari Last Wish in Bigg Boss

பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகும் போட்டியாளர், அந்த வீட்டை விட்டு வெளியேறும் முன், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட டிராபியை உடைத்துவிட்டு தான் வெளியே செல்வார்கள். ஆனால் மஞ்சரி, நேற்று அந்த டிராபியை உடைக்கும் முன், பிக் பாஸிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். தான் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்துவிட்டு வருவதாக தன் மகனிடம் கூறி இருந்ததாகவும், தற்போது அது நிறைவேறாமல் போனதால் இந்த டிராபியை உடைக்காமல் எடுத்துக் கொண்டு சென்று என் மகனிடம் கொடுக்க ஆசைப்படுகிறேன் என கூறினார்.

55
Manjari Narayanan

Manjari Narayanan

ஆனால் இதற்கு அனுமதி அளிக்காத பிக் பாஸ், அந்த டிராபியை உடைக்குமாறு கூறினார். மஞ்சரி கண்ணீர் விட்டு அழுதும் பிக் பாஸ் அவருக்கு அந்த டிராபியை கொடுக்காதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. டம்மி டிராபியை கூட கொடுக்க மனமில்லாத பிக் பாஸ் இவ்வளவு கல்நெஞ்சக்காரரா என சாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... வைல்டு கார்டு போட்டியாளராக வந்தாலும் வெயிட்டான சம்பளத்தோடு வெளியேறிய மஞ்சரி - ராணவ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
Recommended image2
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?
Recommended image3
யூத் முதல் சீதா பயணம் வரை... உகாதி ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved