MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோட் படத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்த பிக் பாஸ் ஜூலி: அண்டாகாகசம் 3 நிகழ்ச்சியில் போராட்டம்!

கோட் படத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்த பிக் பாஸ் ஜூலி: அண்டாகாகசம் 3 நிகழ்ச்சியில் போராட்டம்!

Bigg Boss Julie Protest against Anda Ka Kasam Season 3 Game Show : கோட் படத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்த பிக் பாஸ் ஜூலி பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம்.

2 Min read
Rsiva kumar
Published : Dec 30 2024, 02:31 PM IST| Updated : Dec 30 2024, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Anda Ka Kasam is BACK, Ma Ka Pa Anand

Anda Ka Kasam is BACK, Ma Ka Pa Anand

Bigg Boss Julie Protest against Anda Ka Kasam Season 3 Game Show : விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. தற்போது கம்பெனி, ஸ்டார்ட் மியூசிக் சீசன் 5, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10, பிக் பாஸ் தமிழ் சீசன் 10, அண்டாகாகசம் ஆகிய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு அண்டகாகாசம் என்ற ரியாலிட்டி ஷோ முதல் சீசனை அறிமுகம் செய்தது. இந்நிகழ்ச்சியை மகாபா ஆனந்த் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 2 அணிகள் இடம் பெறுவார்கள். ஒரு அணியில் 3 பிளேயர்ஸ் இடம் பெறலாம்.

26
Bigg Boss Julie, Anda Ka Kasam Season 3

Bigg Boss Julie, Anda Ka Kasam Season 3

மொத்தமாக 3 சுற்றுகள். இதில், முதல் சுற்றில் 30 வினாடிகளில் சேலஞ்ச் செய்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடிந்தால் அந்த அணிக்கு ஒரு பாய்ண்ட். இல்லையென்றால் எதிரணிக்கு ஒரு பாய்ண்ட். 2ஆவது சுற்றில் ஒரு இமேஜ் காண்பிக்கப்படும். அதில் பொருட்கள், நடிகர்கள், நடிகைகள், விலங்குகள், சாப்பாட்டு வகைகள் என்று இடம் பெற்றிருக்கும். குறிப்பிட்ட வினாடிகளுக்குள் அதனை ஞாபகப் படுத்திக் கொண்டு ஒருவர் சொன்னதை மற்றொருவர் சொல்லாதபடி பார்த்தவற்றை சொல்ல வேண்டும்.

கடைசி சுற்றாக குளுவை வைத்து படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டு. இதற்கு 5 பாய்ண்ட்ஸ். இதில் 3 பாய்ண்ட்ஸ் எடுத்தால் அண்டாகாகசம் குகைக்குள் செல்வார்கள். அதில், 120 வினாடிகளுக்குள் பிடித்த பொருட்களை எடுத்து வட்டத்திற்குள் வைக்க வேண்டும். அதன் பிறகு மந்திரம் சொல்ல வேண்டும். மந்திரம் சரியானால், அவர்கள் எடுத்த பொருட்கள் அவர்களுக்கே சொந்தம்.

36
Mahanadhi Serial, Myna Nandhini, Farina Azad

Mahanadhi Serial, Myna Nandhini, Farina Azad

இப்படி ஒவ்வொரு சுற்றிலும் இருக்கும். இது தான் அண்டாகாகசம். இந்நிகழ்ச்சிக்கு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வந்தனர். 2022 ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து 2023 ஆம் ஆண்டு 2ஆவது சீசன் நடைபெற்றது. இதையடுத்து புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் 29ஆம் தேதி இந்நிகழ்ச்சியின் 3ஆவது சீசன் தொடங்கப்பட்டது.

46
Anda Ka Kasam Game Show, Serial Actress Lakshmi Priya

Anda Ka Kasam Game Show, Serial Actress Lakshmi Priya

இதில், ரௌடி ராக்காயில் அணியில் மைனா நந்தினி, பிக் பாஸ் ஜூலி, ஃபரீனா ஆகியோரும் ராங்கி ரங்கம்மா லட்சுமி பிரியா, ஆர்த்தி சுபாஷ் மற்றும் ஷில்பா ஆகியோர் கலந்து கொண்டு விளயாடினார். இதில் முதல் சுற்றை ரௌடி ராக்காயி அணி வெற்றி பெற்றது. ஃப்ரீனா குகைக்குள் சென்று ரூ.2,60,000க்கான பொருட்களை கைப்பற்றி மந்திரத்தை சொல்லி வெற்றி பெற்றார். அந்த தொகையை வைத்து பந்தயம் விளையாடி ரூ.4,50,000க்கான போட்டியில் விளையாடி தோல்வி அடைந்தார்.

56
Anda Ka Kasam is BACK, Ma Ka Pa Anand

Anda Ka Kasam is BACK, Ma Ka Pa Anand

இதைத் தொடர்ந்து 2ஆவது சுற்றில் ராங்கி ரங்கம்மா அணி வெற்றி பெற்றது. இதில் அவர்கள் ரூ.1,22,000 க்கான பொருட்களை எடுத்து மந்திரம் சொல்லி ரூ.2.50,000க்கான போட்டியில் விளையாடி வெற்றி பெற்றனர். இதையடுத்து கடைசி சுற்று போட்டி நடைபெற்றது. இதில், முதல் பாய்ண்டை ராங்கி ரங்கம்மா அணி வெற்றி பெற்றது. 2ஆவது பாய்ண்ட்டையும் அவர்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து, 3ஆவது பாய்ண்டை ரௌடி ராக்காயி அணி கைப்பற்றினர். 4ஆவது திரைப்படத்திறான குழுவில் 4 பேர், பைக், விசில் என்று குளு கொடுக்கப்பட்டது. கடைசி குளுவாக கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பதிலாக கால்பந்து ஸ்டேடியம் இடம் பெற்றது. ஆனால், இந்த குளுவை வைத்து ரௌடி ராக்காயி அணி பிகில் என்று கூறி தவறான பதிலை அளித்தனர். இந்த குளுவிற்கான பதிலாக கோட் என்று மாகாபா அறிவிக்க, அப்போது ஜூலி தன்னுடைய வாக்குவாதத்தை தொடங்கினார்.

66
Maria Juliana, Bigg Boss Julie, Anda Ka Kasam Season 3

Maria Juliana, Bigg Boss Julie, Anda Ka Kasam Season 3

கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பதிலாக கால்பந்து ஸ்டேடியம் இடம் பெற்றதாக கூறி ஜூலி போராட்டம் செய்தார். அதற்கு மாகாபா பீச்சில் தன் போராட்டம் பண்ணுவ, இப்போ புரோகிராமிலும் போராட்டம் பண்ண ஆரம்பித்துவிட்டாயா என்று கேள்வி எழுப்பினார். கடைசியாக குளுவில் ஏற்பட்ட தவறுக்காக ரீ மேட்ச் நடைபெற்றது. இதில் இந்த பாய்ண்ட் ராங்கி ரங்கம்மா அணிக்கு கொடுக்கப்பட்டது. எனினும், இந்த சுற்றில் வெற்றி பெற்று, ராங்கி ரங்கம்மா அணி குகைக்குள் சென்று மந்திரத்தை தவறாக சொல்லி தோல்வியை தோல்வியது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved