விஜய் ரசிகர்களிடம் வசமாக சிக்கி கொண்ட பிக்பாஸ் பிரபலம்..இதெல்லாம் தேவையா?
பீஸ்ட் கிளைமேக்ஸ் குறித்து பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் தெரிவித்தது விட்டு தற்போது செமையாக விஜய் ரசிகர்ளிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்.

Beast
விஜயின் பீஸ்ட் :
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். டாக்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இந்த படத்தை உருவாக்கி வருகிறார். சான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Beast
முதல் புகைப்படங்கள் :
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை பின்னர் 100 வது நாள் படபிடிப்பு குறித்த புகைப்படம் வெளியானது. இதையடுத்து விஜயின் பிரத்யேக புகைப்படங்களும் வெளியாகி மாஸ் காட்டியது.
Beast
முதல் சிங்கிள் :
டாக்டர் பாணியில் உருவாகியிருந்த ப்ரோமோவை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை கொடுத்திருந்தார். அந்த ப்ரோமோவில் சிவகார்த்திகேயன், நெல்சன், அனிரூத் மூவரும் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் கலாட்டா பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு... Beast Teaser : ஜாலி மூடில் இருந்து ஆக்ஷனுக்கு மாறும் தளபதி.. சுடச்சுட வருகிறது பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்
beast
அரபிக் குத்து :
ப்ரோமோவை தொடர்ந்து காதலர் தினத்தன்று அரபிக் குத்து என்னும் பாடல் வெளியாகியது. இதில் விஜயின் அட்டகாசமான ஸ்டெப்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எக்கச்சக்க பார்வையாளர்களையும் பெற்று சாதனை செய்திருந்தது.
beast
இரண்டாவது ப்ரோமோ :
அரபிக் குத்து பாடலை அடுத்து இரண்டாம் சிங்குளுக்கான ப்ரோமோ சில நாட்களிலேயே வெளியானது. இதற்கான ப்ரோமோவில் விஜய், அனிரூத், நெல்சன் மூவரும் கலக்கி இருந்தனர். இந்த ப்ரோமோவும் வெற்றி கண்டது.
beast
ஜாலியோ ஜிம்கானா :
இரண்டாவது சிங்குளாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானது. இந்த பாடலை கார்த்தி எழுதியிருக்க விஜய் தன சொந்த குரலில் பாடியிருந்தார். இந்த பாடல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டு வெற்றி கொண்டாடி வருகிறது.
beast
ஜாலியோ ஜிம்கானா :
இரண்டாவது சிங்குளாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானது. இந்த பாடலை கார்த்தி எழுதியிருக்க விஜய் தன சொந்த குரலில் பாடியிருந்தார். இந்த பாடல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டு வெற்றி கொண்டாடி வருகிறது.
beast
எக்குத்தப்பாக மாட்டிக்கொண்ட அபிஷேக் :
இந்நிலையில் பிக்பாஸ் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்ட அபிஷேக் தற்போது விஜய் ரசிகர்ளிடம் மாட்டிக்கொண்டுள்ளார். பிக்பாஸ்- இருந்து வெளியேறிய அபிஷேக் மீண்டும் சினிமா விமர்சனம் மற்றும் அப்டேட் கொடுக்கும் ஆரம்பித்துள்ளார். அதன்படி பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் சண்டை அதன் டெக்னிக்கல் டீம் செய்துள்ள சம்பவத்திற்காக பேசப்படும் என அபிஷேக் ராஜா பதிவிட்டுள்ளார். இதனால் கடுப்பான ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.