கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்! 13 போட்டியாளராகளுக்கும் ஆப்பு; கதறிய முத்துக்குமரன்!
பிக்பாஸ் சீசன் 8 கேப்டன்சி டாஸ்கில், நடந்த விதி மீறல் காரணமாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்த முக்கிய சலுகையை பிக்பாஸ் ரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
BB Tamil Season 8 Promo
விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை எட்டி உள்ளது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் சேதுபதியின் கடுமையான கண்டிப்புக்கு பின்னர்... முன்பு போல் அதிக சண்டை சச்சரவு இல்லாமல், அவ்வப்போது தரமான வாக்குவாதங்கள் மட்டுமே நடந்து வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
Bigg Boss Tamil season 75th Day
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடக்குமா? அல்லது ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற்றப்படுவாரா என்கிற ஆவல் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இந்த வாரம் ரசிகர்களின் கணிப்பு படி பிக்பாஸ் வீட்டில் இருந்து ராணவ், ரஞ்சித் அல்லது அக்ஷிதா ஆகியோர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Captaincy Task Promo
குறிப்பாக மிகவும் குறைவான வாக்குகளுடன் அக்ஷிதா தான் கடைசி இடத்தில் உள்ளார். எனவே இந்த வாரம் சிங்கில் எவிக்சன் இருந்தால் இவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்பதே நெட்டிசன்கள் கணிப்பு. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த வார கேப்டன்சிக்கான டாஸ்க்கை பிக்பாஸ் நடத்தியுள்ளார்.
Muthukumaran Break the Rule
இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய ஜெஃப்ரி, முத்துக்குமரன், மற்றும் பவித்ரா ஆகியோர் கிடையே தான் கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றுள்ளது. இதில் ஜெஃப்ரி வெளியேறிய நிலையில், பவித்ரா மற்றும் முத்துக்குமரன் கிடையே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் இடம்பெற்றிருந்த விதிமுறைகளின் படி, கோல் போடவேண்டும். அதே போல் யாரும் தன்னுடைய பக்கம் கோல் போடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
'எதிர்நீச்சல் 2' என்ட்ரியால் இரண்டு பிரைம் டைம் சீரியல்களின் நேரம் அதிரடி மாற்றம்!
Bigg Boss Cancelled Captaincy and Nomination Free
ஆனால் குத்துகுமாரன் ஏற்கனவே கேப்டனாக இருந்ததால், இந்த முறை பவித்ராவுக்கு விட்டுக்கொடுக்கும் நோக்கத்தில், அவர் கோல் போட்டபோது அதை தடுக்காமல் அவருக்கு விட்டு கொடுத்தார். ஏற்கனவே சில போட்டியாளர்கள் இப்படி கேப்டன்சியில் விட்டுக்கொடுத்தபோது... கண்டித்த பிக்பாஸ் இந்த முறை, நடந்த விதிமீறலுக்கு ஓட்டுமொத்த போட்டியாளர்களை தண்டித்துள்ளார்.
அதன்படி, இந்த வாரம் கேப்டன்சி ரத்து செய்யப்படுவதாகவும், இனி நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கும் இல்லை என அறிவித்துள்ளார். தான் செய்த தவறால் ஒட்டு மொத்த போட்டியாளர்களும் தண்டிக்கப்பட்டதை எண்ணி, முத்து குமரன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது குறித்த புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.