புதிய சீரியலில் ஹீரோயினாக களமிறங்கும் பிக்பாஸ் அன்ஷிதா! ஹீரோ யார் தெரியுமா?
Bigg Boss Anshitha Serial: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், 'செல்லம்மா ' சீரியல் நடிகை அன்ஷிதா நடிக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் டிவி சீரியல் ஹீரோயின்கள்:
விஜய் டிவியில் ஒரே ஒரு சீரியலில் நடித்தாலே, அதன் மூலம் கிடைக்கும் பிரபலத்தை வைத்து, சில நடிகைகள் வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றி ஹீரோயினாகவும் மாறி விடுகிறார்கள். அந்த வகையில் ப்ரியா பவானியை தொடர்ந்து, தற்போது பாரதி கண்ணம்மா ரோஷ்ணியும் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் என்னும் ஷார்ட் ரூட்:
'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியாவும், ஜெய்பீம் பட வாய்ப்பை மிஸ் பண்ணியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். சில நடிகைகளுக்கு வாய்ப்பு தானாக கிடைத்தாலும், பல சீரியல் நடிகைகள் வெள்ளித்திரைக்கு செல்ல ஷார்ட் ரூட்டை தேடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கெல்லாம் பட வாய்ப்பு கிடைக்கிறதா என்றால் அது சந்தேகமே.
செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா:
அதற்க்கு கொஞ்சம் அதிஷ்டமும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பிக்பாஸ் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்றவர்களும் பலர் உள்ளனர். குறிப்பாக ஹரீஷ் கல்யாண், ரைசா வில்சன், ஆரவ், லாஸ்லியா, கவின், தர்ஷன், ஆகியோரை சொல்லலாம். திரைப்பட வாய்ப்பு வசப்படும் என்கிற ஆசையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் விஜய் டிவி சீரியல் நடிகை அன்ஷிதா. இவர் 'செல்லம்மா' என்கிற தொடரில், 6 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த அர்னவ்வை இவர் காதலிப்பதாகவும் சர்ச்சையில் சிக்கினார். இதன் பின்னர் அர்னவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட நிலையில், அவரிடம் இருந்து பிரேக்கப் செய்து பிரிந்தார்.
விஜே விஷாலுடன் காதல்:
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஜே விஷாலை இவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர், எந்த ஒரு சீரியல் வாய்ப்பையும் ஏற்காமல் இருந்த அன்ஷிதா தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
புத்தம் புதிய சீரியல்:
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக, நடிகர் பிரேம் ஜாக்கோப் நடிக்க உள்ளார். மேலும் குணா குமார், தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நடிகை தர்ஷனா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.