ஆயுதப்படை வீரர்களுடன்... விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட 'பிக்பாஸ்' ரம்யா பாண்டியன்!
சின்ன கலைவாணர் விவேக்கின், ஒரு கோடி மரம் நடும் கனவை பூர்த்தி செய்வதற்காக, அவரது ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்களும், மரம் நட்டு வருகிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகை ரம்யா பாண்டியன் திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட SP. அரவிந்தனுடன், ரம்யா பாண்டியன், மற்றும் காவலர்கள், விவேக்கின் 59 வயதை குறிப்பிடும் விதமாக மரம் நட்டுள்ளனர்.
மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக இன்று ஆயுதப்படை மைதானத்தில் மரம் நடும் விழா நடந்தது.
விவேக்கின் வயதை குறிப்பிடும் வகையில் 59 மரங்கள் நடப்பட்டது
ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார்
விவேக்கின் நினைவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.அரவிந்தன் உட்பட பல காவலர்கள் கலந்து கொண்டனர்.
மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருக்கும் போதே... செடிகள் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்க்கை ஆர்வலராக இவர் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவேக்கின் நினைவாக மரங்களையும் நட்டுள்ளார்.
மறைந்த நடிகர் விவேக்கிற்கு சில நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும் காலவர்கள் அனைவரும் ஒன்றிணைத்து மரங்களை நட்ட காட்சிகள் இதோ