முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பிக்பாஸ் டேனியல்... குட்டி பையனின் பெயர் என்ன தெரியுமா?

First Published 20, Jul 2020, 1:55 PM

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் டேனிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. தனது செல்ல மகனுக்கு பெயர் சூட்டியுள்ள டேனியல், அதை முதன் முறையாக புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”  படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமார் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் டேனி.

அந்த படத்தில் “பிரண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டா புள்ள ஆப் அடிச்சா கூல் ஆயிடுவா புள்ள” என்ற ஒற்றை டைலாக்கில் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பின்னர்  “மரகத நாணயம்” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகத்திற்கும், டேனிக்கும் இடையே அடிக்கடி முட்டிக்கொண்டது. கட்டி உருளும் அளவிற்கு சண்டை எல்லாம் போட்டாங்க.

இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய டேனி, மறுநாளே தனது நீண்ட நாள் காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த காதல் தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ள டேனி, எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் தொடர்ந்து அளியுங்கள் என பதிவிட்டிருந்தார்.

குழந்தை பிறந்து 20 நாட்களுக்கும் மேலான நிலையில் தற்போது டேனி, குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.

மனைவியின் மடியில் தவழும் மகனை கொஞ்சுவது போல் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள டேனியல், "எங்கள் மகனுக்கு கேசன் ஹேய்ஸ் டேனியல் என பெயரிட்டு உள்ளோம் என மகிழ்ச்சியாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். தங்களின் ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

loader