‘நீ நடிக்கவே வேண்டாம் கிளம்புடா’ வடிவேலுவை பாரதிராஜா விரட்டிவிட்ட கதை தெரியுமா?
கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட வடிவேலுவை, இயக்குனர் பாரதிராஜா விரட்டிவிட்ட சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bharathiraja clash with vadivelu : தமிழ் சினிமா ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவும் முக்கியமானவர். தன்னுடைய உடல்மொழியால் ரசிகர்களை இம்பிரஸ் செய்த வடிவேலு, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கினார். இன்றைய நிலவரப்படி மீம் கிரியேட்டர்களுக்கு கடவுள் என்றால் அது வடிவேலு தான். இவரது காமெடி காட்சிகளை தான் இன்று மீம் டெம்பிளேட்டாக சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன. அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் வடிவேலு.
Vadivelu
வடிவேலு படத்தில் காமெடியனாக நடித்து மக்களை சிரிக்க வைத்தாலும், ரியல் லைஃபில் அவர் சற்று கராரான ஆள் என்றே கூறப்படுகிறது. அவருடன் துணை கதாபாத்திரங்களில் நடித்த சக காமெடி நடிகர்கள் பலர் வடிவேலுவின் உண்மை முகமே வேறு என யூடியூப்பில் தொடர்ந்து பேட்டியளித்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத வடிவேலு, சினிமாவில் தற்போது செம பிசியாக நடித்து வருகிறார். அவர் கைவசம் கேங்கர்ஸ், மாரீசன் போன்ற படங்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்... Sona Hiden: பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்; வடிவேலு கூட மட்டும் நடிக்க முடியாது - அலறும் சோனா !
vadivelu Salary issue
இந்நிலையில், கிழக்கு சீமையிலே படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் கேட்டு முரண்டு பிடித்த வடிவேலுவை இயக்குனர் பாரதிராஜா விரட்டிவிட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இயக்குனர் பாரதிராஜா கொடுத்த மாஸ்டர் பீஸ் படங்களில் கிழக்கு சீமையிலே திரைப்படமும் ஒன்று. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். அந்த காலத்திலேயே இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கினர்.
Vadivelu vs Bharathiraja
படத்தின் பட்ஜெட் பெருசு என்பதை அறிந்த வடிவேலு, சரி நம்மளும் நம் சம்பளத்தை உயர்த்தி கேட்போம் என முடிவெடுத்து, இதில் நடிக்க ரூ.25 ஆயிரம் சம்பளம் வேண்டும் என கேட்டாராம். இதனால் கோபமடைந்த பாரதிராஜா, நீ நடிக்கவே வேணாம் கிளம்புடான்னு சொல்லி விரட்டிவிட, அங்கிருந்து கண்ணீருடன் சென்றிருக்கிறார் வடிவேலு. இதைப்பார்த்த தயாரிப்பாளர் தாணு, என்னப்பா ஆச்சுனு வடிவேலுவிடம் கேட்டுள்ளார். அவரும் என்ன நடந்தது என்பதை கூறி இருக்கிறார்.
Comedy Actor Vadivelu
பின்னர் வடிவேலு கேட்ட ரூ.25 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து அவரை ஆறுதல்படுத்திய தாணு, சம்பள விஷயத்தை என்கிட்ட கேட்காம அவர்கிட்ட ஏன்பா கேட்ட, இனி என்னிடமே கேள் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தாராம். இந்த தகவலை தாணுவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த படம் வடிவேலுவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நடிகர் வடிவேலுவுக்கு சொந்த ஊரில் எழுந்த எதிர்ப்பு! பத்தி எரியும் குலதெய்வ கோயில் பிரச்சனை!